அமிலம்

அவள் கடைவிழி
தந்த கிறக்கத்திம்
செவ்விதழ் பூரிப்பிலும்
பின் சென்ற பித்தனே...!
பின் தொடர்ந்தும்
தொழுது வணங்கியும்
காதலை அடைந்துவிட
துடித்தவனே...!
காதலில் கிட்டாத
இன்பத் தூண்டல்களை
அமிலத்துளிகளில்
அடைந்துவிட்டதாய் நினைத்தவனே..?
அவள் அழகின் செருக்கை
அமிலத்தில் அடக்கிவிட்ட ஆண்மகனே...!
கண்ணாடிக்குள்
காதலைக் கண்டவனே...?
கண்டவுடன் கவர்ந்துவிடும்
கயல்விழியாள் அவளை
அழகுப்பதுமை அவளை
அழித்துவிட்டாய்..!
கல்வியின் செருக்குடன்
தன்னம்பிக்கையுடன்
துணிவுடன் நடைபோட்டுக்கொண்டிருக்கும்
அவளை என்ன செய்யப் போகிறாய்...!
எல்லாவற்றுக்கும் உன்னை மன்னித்து
வாழ்ந்துக் கொண்டிருப்பதை
ஒருமுறை சென்று பார்த்துவிடு...!
அவள் காதல் கணவனையும்
கண்ணாரக் கண்டுவிடு..!
இப்பூவுலகில்...
புழுவென சுற்றித் திரியும்
உம்போன்றவர்களின் பாவத்தை
எந்த மனநல காப்பகத்திலாவது
எந்த சிறைச்சாலையிலாவது
எந்த கங்கையிலாவது
சென்று தொலைத்துவிடு...!?