நிலாச்சாரல்

பட்டாடையை உடுத்திக்கொண்டு
நீர்வாணமாக அலைகிறது
***************
பட்டாம்பூச்சி (1)
***************

நண்பனை கூட
திருட்டுத்தனமாக
பார்க்க செய்கிறது
************
தேர்வறை (2)
************

விலையில்லா முத்துகள்
யாரோ ஒருத்தருக்காக
துளிதுளியாய்
**********************
சிந்துகிறது கண்ணீர் (3)
**********************

மலிவான விலையில்
லாபகரமான
தொழில் நடக்கிறது
***********
கலப்படம் (4)
***********

மக்கள் ஆதரவு
கொண்ட திருடர்கள்
********************
அரசியல்வாதிகள் (5)
********************

கொடுத்து வைத்த
வாழ்க்கை
**********
கனவுகள் (6)
**********

ஊமையாகிறது கோவம்
************************
பெண்ணின் மெளனம் (7)
*************************

நீர் ஊற்றாய்
வடிகிறது கவிஞர்கள்
**********
கற்பனை (8)
**********

வீதிகள்தோறும் வீடுகள்
அமைத்து நிம்மதியாய்
*********************
தூங்குக்கிறது சாமி (9)
*********************

ஆரோக்கியம் என்றாலும்
குழந்தைக்கு தரயியலவில்லை
***********
பசும்பால் (10)
***********

எழுதியவர் : கவி தமிழ் நிஷாந்த் (8-Apr-16, 8:46 am)
பார்வை : 233

மேலே