வலியில் பெரியது

வலியில் பெரியது
இக் கேள்வியை
ஓர்
தாயிடம்
கேட்டாள்
பிரசவ வலி
என்பாள்!

ஓர்
காதலனிடம்
கேட்டாள்
காதல் வலி
என்பான் !

ஓர்
மாணவனிடம்
கேட்டாள்
தேர்வு
வலி என்பான் !!

கடவுளிடம்
கேட்டாள்
படைப்பைப்
பற்றிய
வலி
என்பார் !!

இப்படி
வலிகளைப்
பற்றிப்
பேசினால்
நம் விழியேப்
பிதுங்கி விடும் !!!

இதற்கு ஒரே வழி
நம் விழியே !!!!!

வலிக்கு மருந்தாய்க்
கண்ணீரைத் தந்து
தன் கடமையைச்
செய்கிறது !!!

வலியில் பெரியது
எதுவாய்
இருந்தாலும்
அதற்கு உதவும்
விழியே
சிறந்தது !!!!!!!!!!

எழுதியவர் : பெ. ஜான்சிராணி (8-Apr-16, 7:07 pm)
பார்வை : 151

மேலே