மனதில் நல்லதை நினையுங்கள்நல்லதே நடக்கும்

உலகில் எது நடந்தாலும் விதி என்கின்றனர்.. ஆனால்.. இறைவன் சிவபெருமானோ..விதி என்பதை மாற்றி நாடகம் என்கின்றார்.. ஏனென்றால், ஆன்மா இந்த சிருஷ்டி சக்கரத்தில் நடிக்கவருகின்றது என்றால் இது நாடகம் தானே..நாடகம் என்று இறைவன் சொல்கின்றார் என்றால்..நாம் ஒவ்வொருவரும் நாடகம் எப்பொழுது முடிகின்றது..

நாடகத்தின் இயக்குனர் யார்?தயாரிப்பாளர் யார்?இசை அமைப்பாளர் யார்? மற்ற பாகங்களில் யாருக்கு என்ன பாகம் என்று எல்லாம் தெரிந்தவரே நடிகர்..ஆனால், ஆன்மாவாகிய நாம் அறிந்திருக்கின்றோமா.. இல்லை.. அறிந்து கொள்ள முற்படுவதும் இல்லை..

ஏனென்றால், ஆன்மா என்பதையே மறந்து விட்டுள்ளோம்.. இறைவனுடைய நாடகம் என்ற கருத்து மற்றவற்றை அறிந்துகொள்ள முற்பட வேண்டும் என்பதே ஆகும்..கலியுக இறுதியில் அதர்மத்தை அழிக்க கடவுள் வருவார் சரி..வந்து அதர்மத்தை எல்லாம் அழித்துவிட்டு அப்படியே சென்று விடுவாரா என்ன? தர்மத்தை படைப்பேன் என்று சொல்லி உள்ளார் அல்லவா..?

அது எந்த தர்மம் என்று யாராவது அறிந்துகொள்ள முற்பட்டிருக்கின்றோமா?இல்லை.. எல்லா தர்மத்தை சேர்ந்தவர்களும் ஆளுக்கு ஆள் எங்கள் கடவுள் வருவார்.. எங்கள் கடவுள் வருவார் என்று சொல்கின்றார்களே தவிர கடவுள் ஒருவர் என்று உணர்வதில்லை என்பதே வருத்ததிற்குரிய விஷயம்.. இவர்கள் அனைவரும் ஒரு கடவுளைப்பற்றி தான் பேசிக்கொண்டிருக்கின்றோம் என்பதையும் உணர்வதில்லை..

ஏனென்றால் ஒற்றுமை இல்லை..ஒன்றுகொன்று வேறுபாடு..நாம் அனைவரும் ஒரு தந்தையின் குழந்தைகள் என்ற நினைவில்லை..இது இப்படி போய் கொண்டிருக்கும் பொழுது..கடவுளோ இந்த உலகில் சப்தமில்லாமல் வந்து தன்னுடைய காரியத்தை துவங்கிவிட்டார்.. ஏனென்றால்.. கடவுள் தர்மத்தை ஸ்தாபனை செய்யும் பொழுது தர்மத்தில் வாழ்வதற்கு மனிதர்கள் வேண்டாமா..

அதை அதர்மத்தில் இருந்து தேர்ந்தெடுத்து தர்மத்தை கற்றுக் கொடுக்கவேண்டும்.. அவர்களே தர்மத்தில் செல்ல முடியும்..இதுவே கடவுள் போடும் கணக்கு..ஒரு மனிதனுக்கு துன்பம் வருகின்றதென்றால் அவனுடைய கடந்த கால கர்மத்தின் கணக்கு..செய்தவை முன்னால் வருகின்றது.. அது...மலையில்..குகையில்.. கடலில்..விண்வெளியில் எங்கே சென்றாலும் நம்மை விடாது..துன்பத்தால் ஒருவர் தற்கொலை செய்துகொண்டாலும் அந்த பாவம் அடுத்த பிறவிக்கும் அவரை தொடர்ந்து வந்து துன்புறுத்தும் என்பதே உண்மை..

இதைதான் பெரியவர்கள் காசிக்கு போனாலும் கர்மம் தொலையாது என்று சொல்லி வைத்தனர்.. நம்முடைய பாவத்தை கண்டு நாம் ஓடாமல் இருக்க இறைவனிடம் உண்மையை சொல்லிவிட்டு அவருக்கு நேர்மையாக வாழ பழகவேண்டும்.. ஆனால்.. அதற்க்கு முன்னால் பாவத்தை அழிப்பதற்க்கான வழியை தெரிந்துகொள்ளவேண்டும்..

இறைவன் ஒருவரென்றால் அவர் யார் என்று தெரிந்து கொள்ளவேண்டும்..மனித உடல் இருப்பவர் யாரும் இறைவன் அல்ல என்பது எப்பொழுது புத்தியில் வருகின்றதோ..அதுவரை மனிதன் மற்ற ரூபத்தில் இறைவனை தேடிக் கொண்டே இருப்பான் என்பதே உண்மை..பரம்பொருளோ நான் ஒரு ஜோதி வடிவம் என் பெயர் சிவன் என்று சொல்கின்றார்..மனிதர்கள் அவரவர் தேசத்துக்கு தகுந்தாற் போல அவரது பெயரை மாற்றி வைத்துவிட்டனர்..

அவரை அறிந்து கொண்டால் இருள் விலகி வாழ்வில் வெளிச்சம் வரும்..பாவமும் தொலையும்.. வெற்றியும் உண்டாகும்.. வாழ்த்துக்கள்..

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு முகநூல்) (10-Apr-16, 2:25 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 208

மேலே