உறவுகள்

இனங்களும் இழந்தோம்
இல்லமும் இழந்தோம்
இனி இழக்க எதுவுமில்லை
உயிரை தவிர
உறவுகளாய் ஆதரித்து
உணவும் தந்து
இல்லமும் தந்து
பாதுகாப்பும் தந்து
தாயாய் போற்றிட்ட
தாவர அன்னை
தவழ்ந்திட
பூமித்தாய் இடம் தர
மனிதம் மட்டும்
மறுப்பதோ...
குருவிகள் அல்ல
குழந்தைகள் தேவையாய்
தாவரங்கள் காத்திட
மரங்கள் வாழ்ந்திட
மன்றாடுகிறோம்