திருஅரவிந்த் கேஜ்ரிவால்

திரு.அரவிந்த் கேஜ்ரிவால்
டெல்லி முதல்வர் &
ஆம் ஆத்மி கட்சி தலைவர்

16.08.1968 - ஹரியான மாநிலம், பிவானி மாவட்டம், சிவானி நகரில் பிறந்தார்.

1989 - ஐஐடி கராக்பூரில் பி.இ. மெக்கானிக்கல் முடித்து டாடா ஸ்டீல் நிறுவனத்தில் ஜாம்ஷத்பூரில் பணியில் சேர்ந்தார்.

1992 - சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராக பணியை துறந்தார். இந்த காலத்தில் கொல்கத்தாவில் அன்னை தெரஸாவை சந்தித்து, மிஷன் ஆப் சாரிட்டி, ராமகிருஷ்ணா மிஷன், நேரு யுவ கேந்திரா ஆகியவற்றில் தன்னார்வ தொண்டாற்றினார்.

1995 - இந்திய வருவாய்த்துறையில் (IRS) உதவி ஆணையராக இணைந்தார்.

2000 - இந்திய வருமானவரித்துறை இணை ஆணையர் பதவியில் இருந்தவர் அங்கிருந்த ஊழல்களைக்கண்டு அதற்கெதிராக போராடினார்.
நீண்ட விடுப்பில் சென்று தான் நிறுவிய பரிவர்த்தன் என்ற தொண்டு நிறுவனத்தில் கவனம் செலுத்தி தில்லி குடிசைப்பகுதிகளில் ஊழலுக்கு எதிரான மகத்தான பணி செய்தார்.

2005 - தகவல் அறியும் உரிமை (RTI) சட்டத்தை கொண்டு வர பாடுபட்டவர்களில் ஒருவர். கபீர் என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கினார். ஊழலுக்கு எதிரான தனது போராட்டத்தை நடத்திடவும் மக்களுக்கான தனது பணியை முழுமையாக செய்திடவும் 2006 ல் தன் மத்திய அரசுப்பணியை துறந்தார். அதே வருடம் RTI சட்டம் குறித்த பணிக்காக உயரிய ராமன் மக்ஸஸே விருது பெற்றார். பரிசுப்பணம் மொத்தத்தையும் தொண்டு நிறுவனத்திற்கு அளித்தார்.

2010 - காமண்வெல்த் விளையாட்டுகளில் நடந்த மிகப்பெறிய ஊழலை எதிர்த்து போராடினார்.

2011 - அன்னா ஹஸாரே தலைமையில் இனணந்து ஊழலுக்கு எதிரான இந்தியா (IAC) இயக்கத்தை உருவாக்கி ஜன் லோக்பால் சட்டத்தை கொணர போராடினார்.

2012 - லோக்பால் சட்டத்தை கொச்சைப்படுத்திய அரசை IAC எதிர்த்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு கட்டளையிட சமூக ஆர்வலர்களுக்கு உரிமை இல்லை என்று அரசு கூறியதால், சக தோழர்களுடன் இணைந்து ஆம் ஆத்மி கட்சியை 26.12.2012 அன்று நிறுவினார்.

2013 - டில்லி சட்டப்பேரவை தேர்தலில் 28 உறுப்பினர்களுடன் வென்று 28.12.2013 அன்று முதலமைச்சரானார்.

2014 - லோக்பால் சட்டத்தை மக்களுக்கு வாக்களித்தபடி நிறைவேற்ற முடியாத ஒரே காரணத்தால் பதவியை துறந்தார்.

14.02.2015 - மக்களின் அமோக ஆதரவுடன் 70 க்கு 67 இடங்களை கைப்பற்றி மீண்டும் முதல்வராகி இந்தியாவில் ஒரு சிறந்த மக்கள் தொண்டனாக திகழ்கிறார்.

2016 - உலகின் தலைசிறந்த 50 தலைவர்களில் இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே தலைவர் இவரே..!!!

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு முகநூல்) (11-Apr-16, 7:18 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 57

சிறந்த கட்டுரைகள்

மேலே