காதலில் விழுந்தேன்

அலைக் கடலென
மக்கள் கூட்டம். . .
தொணதொணக்கும் தோழிகளின்
அரட்டைக் கச்சேரி. . .
காற்று சருகுகளின்
மொழியில் தூதனுப்ப. . .
அனிச்சையாய் என்
கண்கள் இடம்மாற. . .
மனதைக்கொல்லும் கள்வனாய்
அங்கு நீ!!!!
இயற்கையின் அழகை
ரசித்திருந்தாய் நீ . .
உன்னையே ரசிக்கும்
ரசிகையாய் நான்!!!
நீ வீசிச்சென்ற
ஓர் பார்வையில். . .
ஆயிரம் கனவுகள்
சேகரித்தேன் நான்!!!
நீ பேசிய
வார்த்தைகள் யாவும். . .
எனக்கெனக் கொண்டு
லயித்திருந்தேன் நான்!!!
உனைத் தொடர்ந்தே
வந்தேன் நான். . .
பாதைகள் மாறின
எதிர்திசையில் நீ!!!
கால்கள் மட்டும்
என் வழியில். . .
என் இதயமோ
உன் வழியில்!!!!
-- காதலில் விழுந்தேன் .........