நம்மால் முடியும்
கடவுளிடம் ஓர் வரம் கேட்டேன். .
ஒரே ஒரு வரம் கேட்டேன். ..
வந்து என்னோடு "வாழ்" என்றேன் . .
கையோடு அழைத்தும் வந்தேன். .
அணைத்தும் ஆளும் ஆண்டவனை..
இந்த அரசியலில் கீழ் வாழச்சொன்னேன்...
ஊழல் மிதக்கும் இந்த அரசியல் கடலில். ..
இவனையே போய் வேலை வாங்கிக்கொள்ளச் சொன்னேன் . .
அப்போதுதான்
காசை படைத்தது தவறென்றும்
ஆசையை படைத்தது தவறென்றும்
கடவுளுக்கு புரியவந்தது ....
ஏறோட்டி பிழைக்க சொன்னேன் . ..
கட்டிடங்கள் மீதா பயிர் செய்வான்..?
அப்போது தான். ..
இயற்கையை அழித்து -தான்
இன்பமாய் வாழும் மனிதனை
படைத்தது தவறென்றும் -தான்
நீரை வழங்காமல் போனது தவறென்றும்
இறைவனே உணர்ந்தான்.
வஞ்சகம் கொண்டு அவனை
வாரக்கணக்கில் பட்டினி போட்டேன். .
அப்போதுதான். ..
"பசி எனும் கொடுந்தீயை
அவனும் உணர்ந்தான்...
நானோ..
யாம் பெற்ற இன்பத்தை நீயும் பெறுக..
என்றேன் . ..
அவனோ..
இனி நான் கடவுள் அல்ல. ..
நீர் தான் கடவுள் என்றான் . ..
இந்த ஞாலத்தின் சிக்கலை..
அவனாலும் முடித்துவைக்க முடியாதாம். ....!
என்னால் மட்டும் முடியுமா. ..?
வேலியில் போன ஓணானை
வேட்டிக்குள் விட்ட கதை ஆயிற்றே
என எண்ணிக்கொண்டிருந்தேன். ...
"நம்மால் முடியும் "
என்றது அசரீரி. ...
அன்னையின் குறளே அசரீரியாக ஒழித்தது...என் கனவும் கலைந்தது.