ஒரு இசையாசிரியரின் உள்ள குமுறல்கள் -சிஎம் ஜேசு

சென்னை அருகே குன்றத்தூர். முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று அதன் அருகாமையில்
ஒரு தனியார் கல்லூரி அக்கல்லூரிக்கு தனியார் காவலர்களின் காவலனாக என் மூத்த சகோதரர்
திரு .சகாயம் அவர்கள் ,அவர் கடந்த சித்திரை(14.04.2016) முதல் நாளில் தனது பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கிவிட்டு வருவதாக சொல்லி விட்டு சென்றார் .

அக்கணம் முதல் நாங்கள் அவரை வந்து விடுவார் வந்து விடுவார் என்று வழிமேல் விழி வைத்து
எதிர்ப்பார்த்திருந்தோம் ( இரண்டு சகோதரர்களும் ஒரே குடும்பமாக வசிக்கிறோம்) அவர் வரவில்லை
பல வேலைகள் அவர் வரவிற்காக காத்து கிடந்தது ஒரு சில வேலைகள் மட்டும் முடித்து விட்டு நாங்கள் ஒவ்வருவரும் அவரவர் வேளைகளில் மூழ்கினோம் .

சரியாக மூன்று மணி இருக்கும் எனக்கு ஒரு தகவல்

உங்கள் அண்ணா எதோ ஒரு பிரச்சனையில் குன்றத்தூர் காவல் நிலையத்தில் இருக்கிறார் என்று எனது அண்ணி அவர்கள் சொன்னார்கள் .அச் செய்தி கேட்டு உள்ளம் குமுறிக்கொண்டு முடித்த இரண்டு வேலைகளின் நிம்மதியோடு முடிக்கமுடியாத என் மூன்று பணிகளை ஒதுக்கி வைத்து விட்டு சென்னை இந்த்ரா நகரில் இருந்து உடனடியாக புறப்பட்டேன், சட்டென்று சிறிது தூரத்தில் போக்குவரத்து போலீசார் என்னை நிறுத்தி ,தலைகவசம் போடாமல் வந்ததற்காக அபராதம் கட்டிவிட்டு செல்லுங்கள்
என்றுரைத்து ,வாகனத்தின் ஆவணங்களை கேட்டுக்கொண்டிருக்கும் போதே எங்களுக்குள் வாக்குவாதம் வந்து பின்னர், சிறிது நேரத்திக்கு பின்னால் நீங்கள் போகலாம் என்று சொல்லிவிட்டார்கள் .

என்னடா இது எமக்கு சோதனை என்று உள்ளம் குமுறி விரைந்தேன் குன்றத்தூர் நோக்கி
அங்கு சென்றவுடன் காவல் நிலையத்தை தேடி அதனுள் சென்றேன் அங்கே பணியில் இருந்த காவலர்களிடம் என் அண்ணா பற்றி விசாரித்த போது அவர்கள் உங்கள் அண்ணன் ஸ்ரீ பெரம்புத்தூர்
நீதி மன்றத்தில் இருக்கிறார் ஒரு காவலரை அடித்து காயம் ஏற்படுத்தி இருக்கிறார் .நீங்கள் அவரோடு
பேசுங்கள் என்று காவலர் தன் தொலைபேசியில் பேசி என் அண்ணனிடம் பேச வைத்தார் எனக்கு
கொஞ்சம் நிம்மதி பிறந்தது நன்றி சொல்லிவிட்டு உடன் என் மற்றொரு சகோதரரிடம் தெரிவித்து விட்டு
வீடு வந்தேன். வீட்டில் ஒன்றும் பிரச்சனை இல்லாதது போல் காட்டிக்கொண்டேன் மீண்டும் நானும்

எனது இளைய சகோதரரும் குன்றத்தூர் காவல் நிலையம் சென்று நடந்தவற்றை கேட்டு விட்டு அவரவர்
வீடு திரும்பினோம் .அக்கணம் முதல் நிம்மதி மறைந்தது ,நெஞ்சம் குமுறியது அடியால் அவதியுற்று என் அண்ணன் துன்புற்றதை நினைத்து அவரின் சேவைகள் கண்டு கண்கள் கலங்கி கண்ணீர் வடித்தேன்

சிறு பிரச்சனைகளை குற்றங்களாக்கி எதிர்த்து கேள்வி கேட்டவரை போதை சட்டம் ,குற்றம் ஒப்புகொள்ளல் சட்டம் ,அடித்தல் சட்டம் ,காவலரை கொன்றுவிடுவதாக மிரட்டிய சட்டம் என்று என்ன என்ன சட்டங்கள் போட முடியுமோ அதனை சட்டங்களும் போட்டு நீதி மன்றத்தில் தவிப்பவரைக் காண கண்ணீர் வடிக்கின்றேன் .இசையினை தவிர வேறு ஒன்றும் அறியேன் இறைவனை தவிர வேறு ஒருவரிடமும் அழுது முறையிட மாட்டேன் .இப்போது என் அனுபவத்தை உங்கள் முன் சமர்பிக்கிறேன் .

நா வறண்டு போகிறது ,தூக்கம் இல்லை எங்கள் அம்மாவிடம் ,வீட்டின் குழந்தைகளிடம் பதில் சொல்ல முடிய வில்லை யாரை எப்படி ஆறுதல் படுத்துவது என்றே தெரியவில்லை மனச கடவுளா மாற்றும் பணியில் வாழும் எனக்கு தடுமாற்றம் நிறைந்து இருள் சூழ்ந்து கொண்டது ,இருந்தாலும் ஒரு நம்பிக்கை
நன்மைக்கு இறைவன் செவி சாய்ப்பார் .

இந்த சம்பவத்தினால் இசையில் வாழும் என் உள்ள குமுறல்கள்
இரவில் கைது செய்தவரை ஏன் காலையில் விட்டுவிடவில்லை என்பது

அப்படியே அடுத்தநாள் வெள்ளிக் கிழமை மாலையில் ஏன் அவரை விட்டுவிடவில்லை என்பது
இதனால் சனி மற்றும் ஞாயிறு அரசு விடுமுறை என்பதால் இரண்டு நாள் இன்னும் கூடுதலாகி என்னை
இச்சம்பவம் வாட்டி வேதனை படுத்திக்கொண்டே இருக்கிறது .முடிவு திங்கள் 18.04.2016 தெரியும் .

அதுவரை என் சகோதரரின் இந்த துயரத்தில் என்னால்
ஒன்றும் செய்ய இயலாமல் என் குமுறல்களை எழுத்துக்களாக்கி பதிக்கிறேன் .

தூய மனம் பழகிவிட்டால் தோற்று போக வேண்டி வருகிறது
கூட்டங்களில் இணையாவிட்டால் தனிமை தான் வாட்டுது
கட்சிகளில் சங்கங்களில் இல்லாததால் எனக்கு ஆறுதல் சொல்ல ஆளில்லை

துயரங்களால் தேய்ந்து போகிறேன் சட்டம் பாதுகாக்கும் தோழர்கள் ஏன் நல்லவர்களை அடியாளம்
கண்டு கொள்வதில்லை ஒருவரின் பிரிவு ஒரு குடும்பத்தை அல்லவா வாட்டுகிறது ஒரு குடும்பத்தின் பிரிவு அக்குடும்பத்தில் உயர் பணி புரியும் மனங்கள் சோர்ந்து ஒரு நாட்டை வழி நடத்த முடியாத துயரம் அல்லவா வந்து தொற்றிகொள்கிறது, வாழ்வு நன்மைக்கு வித்திடட்டும் காவல் பணியில் கைது செய்யும் பணிபுரிவோர் கடமை தான் முக்கியம் என்றாலும் கருணை அதிகம் நன்மை பயக்கும் ,நாட்டினை இன்னும் குற்றமற்றதாக்கும் குற்ற செயலை ஒரு மனிதனிடம் அதிகம் திணிக்கும் போக்கு

நாட்டிற்கும் நாட்டின் பாதுகாவலர்களுக்கும் நன்மை பயக்காது, காவல் என்பது கடவள். அக்கடவுளாக நாமிருந்து மக்களை குற்ற செயல்களிலிருந்து எளிதில் வெளிவர செய்வது நல்ல மனிதர்களை மதிப்பது போலாகும்.காத்திருக்கிறேன் அண்ணாவிற்காக இனி நன்மைக்கு வித்திடும் செயல் புரிய சிந்திக்கிறேன்

எழுதியவர் : சி.எம்.ஜேசு (17-Apr-16, 12:22 pm)
பார்வை : 47

சிறந்த கட்டுரைகள்

மேலே