தந்தைக் கவிதைகள் பக்கம் -02--முஹம்மத் ஸர்பான்

மின்னல் வெளிச்சத்தில் பரவும் ஒளிப்பாம்பை போல்
கண்களின் கண்ணீரில் பரவும் ஆனந்தக் கீதம் தந்தை அன்பு

பள்ளி செல்லும் வரை உன்னைப் போல்
அன்பான ஆசான் இல்லை
பள்ளி சென்ற பின் உன்னைத் தவிர
அன்பான ஆசான் எவனுமில்லை

வானம் கைகளால் பிடிக்க முடியாத தூரத்தில்
இருந்தாலும் நிலவை அன்னத்தில் கதையாக்கி ஊட்டிவாய்
நெஞ்சில் நம்பிக்கை எனும் விதையை விதைத்த
முதல் கடவுள் தந்தை

தோளுக்கு மேல் வளர்ந்த பின்னும்
கை பிடித்து பாதை காட்டிடும்
பாசம் மாறா விழிகள் வாழ்க்கை
உணர்த்திய அன்பின் வழியில்..
நான் வெற்றியை மட்டும் கண்ட பயணம்
நரைத்த பின்னும் இளமையான
என் தந்தையின் நெஞ்சம்

எத்தனை தோழன் இருந்தாலும்
அத்தனை தோழனும் உன்னிடம்
தோற்றுப் போகிறான் என் தந்தையே!

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (19-Apr-16, 1:15 am)
பார்வை : 270

மேலே