கற்றதும் மகாத்மா காந்தியின் சிரிப்பும்

கற்றதும் மகாத்மா காந்தியின் சிரிப்பும்

பொய் பேசலாம் பிழையில்லை
உண்மை பேசுபவன்தான்
பிழைக்கத் தெரியாதவன்

ஏமாற்றலாம் தவறில்லை
ஏமாறுபவன்தான் அறிவில்லாதவன்

தவறுகள் செய்யலாம் தண்டனையில்லை
மறைக்கத் தெரியாதவன்தான் முட்டாள்

துரோகம் தவறல்ல
நண்பனுக்குத்தான் விபரம் போதவில்லை

ஊழல் தண்டனைக்குரியது அல்ல
நேர்மையாக இருப்பவன்தான்
சம்பாதிக்க தெரியாதவன்

அடித்து பறித்துக் கொள்ளலாம்
அன்பு காட்டுபவன்தான் பலவீனமானவன்

சுயநல வாழ்வும் சிறந்ததே
பொதுநலம் பார்ப்பவன்தான் ஏமாளி

அடுத்தவரை அவமான படுத்தலாம்
பிறர்மனம் பார்ப்பவன்தான்
அனுபவிக்க தெரியாதவன்

கொலை கொள்ளை பாவமில்லை
சம்பாதித்தவன் திருடியிருப்பான்

வல்லுறவுக்கு குற்றமில்லை
வழியில் தனியாக வந்திருக்க கூடாது

அதுசரி
அறம் சார்ந்து வாழ்ந்து
எதை சாதித்தாய்

கேள்விக்குறியுடன் நிமிர்ந்த
என்னைப் பார்த்து
சிரித்துக் கொண்டிருந்தார்
சுவற்றில் இருந்த
மகாத்மா காந்தி

எழுதியவர் : சூரியகாந்தி (19-Apr-16, 1:59 am)
பார்வை : 84

சிறந்த கவிதைகள்

மேலே