தமிழே உன்னை தாள் பணிவேன்

கவியாசனம் உனக்கே வையத்தில்
உமக்கு நிகராருமுண்டோ தமிழே!
பாவினால் பசி போக்கும்
எம்தாயிக்கு தாயாருமுண்டோ தமிழே!!
தீம்பணுவளால் தீங்கு தீர்க்கும்
உம்கவியழிக்க கணையுண்டோ தமிழே!
வெந்தே போயினும் நொந்தேமாயினும்
உன்சுவைமறவ முடியுமா தமிழே!!
திகழ்பா ஒருநான்கும் திகழ்புகட்டும்
பல்பணி பூண்டவள்நியோ தமிழே!
பட்டமரம் படுத்துரங் கையிலே
பண்ணால் பரதமாடச்செய்வாயேத் தமிழே!!
இயலிசை நாடகநாயகியாய் மூவேந்தர்
மடியினில் தவழ்ந்தபூங்குழலி தமிழே!
கம்பன் காவியத் தலைவியாய்
கவிபாட நாவினில் உதித்திட்டாயேதமிழே!!
பழமைப்பெற்ற பருவ மங்கையல்லவா
பாரதிகண்ட புதுமைப்பெண் நீயோதமிழே!
அயலானும் போற்றிடும் அருட்செல்விநீ
உம்சிறப்புக்கு ஈடுண்டோ தமிழே!!
வள்ளுவன் வாய்மொழியில் உம்புகழ்மணக்க
நித்தம்நீதி யாவும்உம் வசைபாடும்தமிழே!
கம்பன்காவியம் கைகோர்க்க தொல்காவிய
முனைதொழஅகம் புறம்கொண்ட தமிழே!!
அவ்வைதந்த ஆத்திச்சுவடி வையத்திற்கு
வழிகாட்டிய சுவடியாவும் நீயேதமிழே!
தமிழன் உயரநீயோர் ஏணி
ஏழுகடற்கடக்க நீயோர் தோணிதமிழே!!
நக்கீரன் நாவினில் உதித்திட்டாய்
நாநிலத்தும் புகழ்படைத்திட்டாயே தமிழே!
அடுப்பொன்றேயெரியவில்லை எல்லாம் எரிகிறது
நீஅமுதகானம் பொழிகையிலேயெல்லாம் குளிர்கிறதேதமிழே!!
ஏழையின் சிறிப்பில் சிறப்பூட்டி
வறுமைப்போக்கிட வழிகாட்டிய தமிழே!
தரணிபோற்றும் தத்துவப் பெருங்கடலாய்
தொய்வப்புலவனை காத்திட்ட தமிழே!!
பொதியைமலைத்தோன்றி மதுரைநகர் கண்டு
ஒலிர்ந்திட்ட மன்றம்நீயே தமிழே!
தென்னகத்தில் தேன்பொழியும் தெள்ளமுதாய்
நீ திகழ்ந்தாயே தமிழே!!
முக்கனி சுவைக்கொண்டு மூவேந்தர்
மடியினில் தவழ்ந்தபூங்குழலி நியோதமிழே!
ஆனைகலம்புக அறிவுடைநம்பி ஆட்சியில்
அறியுரை வழங்கிய தமிழே!!
கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்றுவருகுது
என விடுதலைவேட்கையை உண்டாக்கியதமிழே!
என்றென்றும் நாவார உம்புகழ்பாட
கால மேகப் புலவனைப்போல்
கவிபடைத்து தாள் பணிவேன்தமிழே
தாள் பணிவேன் தமிழே!!.........
- காமேஷ்

எழுதியவர் : காமேஷ். வ (19-Apr-16, 10:02 am)
பார்வை : 212

மேலே