அய்யோ, எம் பையன் பேரு குதிரைக்காரனா
வாடா தம்பி. வீட்டிலே எல்லாம் நல்லா இருக்காங்களா?
எல்லாம் நலமா இருக்காங்க அண்ணே. எங்க அண்ணியும் உங்க பையனையும் காணோம்?
அண்ணியும் அஷ்வினும் கோயிலுக்குப் போயிருக்காங்கடா தம்பி.
சரிண்ணே . உங்க பையனுக்கு அஷ்வின் -ன்னு இந்திப் பேர வச்சிருக்கீங்க. அந்தப் பேருக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா?
அட போடா தம்பி. இந்திப் பேருக்கெல்லாம் அர்த்தம் பாத்து தமிழர்கள் யாரும் அவுங்க பிள்ளைங்களுக்குப் பேரு வைக்கற பழக்கம் இல்லடா தம்பி. ஏதாவது அவுங்களுக்குப் பிடிச்ச இந்திப் பேரா இருக்கம்ணு அவ்வளவு தான்.
அண்ணே நா எங்க பக்கத்து வீட்லே இருக்கற இந்தி ஆசிரியர்கிட்ட அஷ்வின் -ங்கற பேருக்கு என்ன அர்த்தம்னு கேட்டேன். அவரு சொன்னாரு அஷ்வின் =ன்னா சமஸ்கிருதத்திலே குதிரைக்காரன், அல்லது குதிரையை அடக்குபவன் -ன்னு அர்த்தம்னு சொன்னாரு. அதுக்கு வெளிச்சம், ஒளிங்கற அர்த்தமும் இருக்குதுன்னு சொன்னாரு.
அய்யோ எம் பையம் பேரு குதிரைக்காரனா? அய்யய்யோ சினிமா மோகத்திலே எம் பையனுக்கு குதிரைக்காரன்ங்கற இந்திப் பேர வச்சிட்டனே. சரி சரி. ஒரு வழக்குரைஞரப் பாத்து அவனுக்கு ஒரு நல்ல தமிழ்ப் பேர வச்சு அதச் சட்டப்பூர்வமா மாத்திடறேன். நல்ல வேளை நீ எனக்கு இந்தத் தகவலைச் சொன்ன. அண்ணிக்கு அஷ்வின்ங்கற பேருக்கான அர்த்தம் தெரிஞ்சா என்ன கோவத்திலே பூரிக் கட்டையிலே அடிச்சிருவா.
@@@@@@@@@@@@@@@@@
படம்: நன்றி மனிதன்காம்
---------------------------------------------------
Ashwin means "possessor of horses" or "horse tamer" in Sanskrit.
ਅਸ਼੍ਵਿਨ; ਅਸ੍ਵਿਨ; અશ્વિન; અસ્વિન; अश्विन; ಅಶ್ವಿನ; ಅಸ್ವಿನ; அஷ்விந; அஸ்விந; অশ্িন;অস্িন; అశ్విన; అస్విన; അശ്വിന; അസ്വിന
The meaning of the name Ashwin: Horse Tamer, Light
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி: விக்கிபீடீயா & இண்டியாசைல்ட்நேம்ஸ்காம்

