இயற்கை பூமி மீண்டும் உருவாகட்டும் மீட்டெடுப்போம் நம் பூமியை

என்ன வேண்டுமானாலும் வேதியியல் தரலாம்
ஆனால் உணவை தரமுடியாது
ஆதலால்
விவசாயியையும்
விவசாயத்தையும்
இயற்கையையும்
பாதுகாப்போம்
போற்றுவோம்

அன்று
காடுகள்
இன்று
குப்பைகள்
அன்று
ஆறுகள்
இன்று
சாக்கடைகள்

நாம் உண்ணும் உணவு
சுகாதாரமானது என்று
நாம் தான் கூறலாம்
இயற்கை விவசாயமா
செய்கிறோம்
பசுமையான காய்கறிகள் கிடைக்க


வேதியியல் வேண்டாமென்று
கூறவில்லை
இன்றைய காலகட்டத்தில்
தவிர்க்க முடியாத ஒன்றாய்
உருமாறி நிற்கிறது
இயற்கையை நசுக்காமல்
இணைந்து வாழட்டும்
செயற்கை என்கிறேன்

நாம் வளர்ந்துவருகிறோம்
என்று
நாம் தான்
புலம்புகிறோம்

ஒரு திட்டமிட்ட வளர்ச்சி
ஏதுமின்றி

நம் மூதாதையர்கள்
நாளை என்று விசாலமான
பார்வையில்
இயற்கையை செழிப்புடன் பாதுகாத்தனர்

நாம் எப்படி
பாதுகாக்கிறோம்
என்று
பேருந்தின் ஜன்னல்வழி
பாருங்கள்

செயற்கை உலவட்டும்
இயற்கை உலகில்

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (28-Apr-16, 5:08 pm)
பார்வை : 1729

மேலே