உழவன்
உலகம்
உழுது பார்த்ததில்
உண்டானது.
இன்றோ உலகம்
உழுதவனை
உற்றுபார்க்க மறுக்கிறது.
விண்ணையும்,மண்ணையும்
நம்பி விவசாயம் பார்க்கும்
விவசாயிக்கு
நம் செய் நன்றி என்ன?
உண்ணும் உணவை
உண்ணும் முன் உற்று பார்...
விதை நெல்லின் உயிர் தெரியும்
நீர் பாய்த்து நெடுவயல் கண்ட
உழைப்பு தெரியும்..
களைஎடுத்த களைப்பு தெரியும்....
உழைப்பின் பால்
வந்த வேர்வை உவர்ப்பு தெரியும்....
நெல் மணியை கண்டதும்
ஆனந்த கூத்து தெரியும்....
இத்தனையும் தனி மனிதன்
உழைப்பல்ல,
ஊர் கூடி உழைத்தது
உழவர் கூட்டம்.
சோற்றில் கை வைக்கும் முன்
சேற்றில் பதித்த அவர்களின்
பாதம்
வணக்குவோம்.
அவர்கள்
வயல் விட்டு விலகாதவரை,
நம் வயிற்றுக்கு குறைவில்லை.
உயிர் காக்கும்,
உழவுக்கு வந்தனம் செய்வோம்.