குறும்பா
உறங்கியது வீதி
விழித்திருக்கிறது
தெரு விளக்கு
***********************************
சிதறியது சில்லறை
தேட முடியவில்லை
போட்டது குருடன் வேடம்
****************************
படகுப் பயணம்
மறையும் நிலவு
ஆற்றைக் கிடக்கும் இரவு
***************************
உடைந்தது சவர அலகு
கன்னத்தில் ரத்தம்
கோபத்தில் மீசை
*******************
ஓய்வூதியப் பணம்
உற்சாகமாக கரைகிறது
ஊதாரி மகன் கையில்
***************************