மழையின் நடனம்

மாலை நேரமொன்றில்….
டீக்கடையில் இருக்கையில்..சட்டென பெய்ந்தது மழை.

காற்றால் உருட்டப்பட்ட மேகக்கிண்ணங்களிலிருந்து..
தாவிக்குதித்தன மழைத்துளிகள் ..
புவியடைந்த சந்தோஷத்தில் மழை தொடங்கியது..
களிநடனம்.

இடிதான் இசையமைப்பாளர் ..
மின்னல்தான் ஒளிப்பதிவாளர்…
ஆடின மழைத்துளிகள்.. நடன அமைப்பாளர் இல்லாமலே.

மழை தான் ஆடிய இடத்தில்..
மண்ணை கரைந்தோடச் செய்தது..
ஒரு மழைத்துளி ஆடி ..சிதறி ..அமிழ்ந்த இடத்திலயே..
அரங்கேற்றமானது மற்றொரு மழைத்துளியின் நடனம்.

எழுதியவர் : பா.சிவச்சந்திரன் (28-Apr-16, 11:04 pm)
Tanglish : mazhaiyin nadanam
பார்வை : 198

மேலே