மே 1 - அஜித்குமார் பிறந்தநாள் - உழைப்பாளிகளின் நாள்

மே 1 - உழைப்பாளிகளின் நாள்
அஜித்குமார் பிறந்தநாள்

நாம் நினைப்பதுண்டு ஏன் அஜ்ஜிதை மட்டும் இத்தனைப் பேர் உயிராய் நேசிக்கிறார்கள் என்று
"ரஜினி" மற்றும் "கமல்" கூறியதுண்டு
எங்கள் குரு பாலச்சந்தர் என்று
அவர்கள் எங்கோ வளர்த்து விட்டார்கள்
இன்னும் குருபக்தி உண்டு
உயிருக்கு உயிராய் ரசிகர் பட்டாளங்கள்
விஜய் சொல்வதுண்டு " என் இமேஜை யாராலும் அளிக்க முடியாது. அவரை அவர் அப்பா உருவாக்கி விட்டார்
சிம்பு தனுஷ் ஜெயம் ரவி என எல்லா நடிகர்களும் அப்படித்தான்
அஜித் சொல்வதுண்டு "நான் நானாக வளர்ந்த காட்டுச்செடி" என்று
தூக்கி விட ஆளும் இல்லை

தமிழர் என்றோர் இனமுண்டு
தனியே அவருக்கோர் குணமுண்டு .. உண்மை தான்

எல்லோருக்கும் என் சரவணா ஸ்டோர்ஸ் என்றால் பிடிக்கிறது
ஒரு சாதாரணமாக உடை அணிந்து ஆரவாரம் இல்லாமல் இருப்பதால்
ரஜினியை பிடிக்கும் கூட்டம் அதிகம்
அந்த அளவுக்கு கமலை பிடிபதில்லை.
எங்கு வந்தாலும் பரட்டை தலை , வழுக்கு மண்டை .. மக்களோடு மக்களாய்
ஆடம்பர காருக்கு விருப்பம் இல்லை ..
பலக்கோடி பணமிருந்தும்
நேற்று வந்த சிவகார்த்திகேயன் ஒரே படத்தில் ஆடி கார்
நேற்று திருமணமான அஞ்சனாவிற்கும் ஆடி கார் பரிசு
இவர்களை நாம் குற்றம் சொல்லவில்லை
ஆசைகள் மனிதனின் கூடப்பிறந்தவை
சங்கவி கூட ஆட்டம் போட்ட விஜய்க்கு நாடாளும் ஆசை வந்துவிட்டது
எம் ஜி ஆர் மக்களோடு மக்களாய் இருந்தார்
படத்தில் எப்பொழுதும் நலவரகவே இருந்தார்
எல்லாப் படத்திலும் "அண்ணா" "அண்ணா" என் சொல்ல ஒரு தங்கை உண்டு
"அண்ணா" வழி அரசியலில் புக அப்போதே தெளிவாக முடிவு எடுத்தார்
அண்ணா என் வழிகாட்டி
காமராஜர் என் தலைவர் என்றார்
பின்பு வளரும் கட்சியான அண்ணாவை பின்பற்றினார்
சிவாஜி நடிப்பில் பிச்சைகாரன் என்றாலும் நடிப்பாகவே பார்த்தார்
காங்கிரஸில் நின்று ஜொளிகாமல் போனார்
இப்படி தமிழன் தமிழன் அல்லா தார் எண்ணப் பாராமல் குணத்தை மட்டுமே பார்க்கும் தமிழ் மக்கள்
தேவை இல்லாத பேச்சு இல்லை
தேவை இல்லாத பந்தாஇல்லை
கட்சி இல்லை
ரசிகர் மன்றம் இல்லை
இதுவே
அமைதியான
அஜித்தின் உச்சத்திற்கு காரணம் .
தல தல தான்

எழுதியவர் : கவி ராஜா (1-May-16, 8:11 pm)
பார்வை : 426

சிறந்த கட்டுரைகள்

மேலே