10 செகண்ட் கதைகள் - யார் வச்சிருக்கா
முப்பது வருசத்துக்கு முன்னாடி
வேதமூர்த்தி வாத்தியார் வச்சிருந்த சைக்கிளை
இப்போ யார் வச்சிருக்கா? என்றால்..
..
..
அவரே தான்.
பார்த்த போது தள்ளிக்கொண்டு போனார்.
முடியவில்லையாம்.
தான் இருக்கும்வரை கூடவே இருக்கட்டுமென்றும்
கைத்தடிக்கு பதிலாக வைத்திருப்பதாகவும் சொன்னார்.