10 செகண்ட் கதைகள் - விக்கல்

மகனுக்கு விக்கல்:
"தாயை முதியோர் இல்லத்தில் விட்டு விட்டு வந்தவனுக்குள் குற்ற உணர்ச்சி, வெளிப்பட்டும் அடக்கி கொண்டான், மனைவியிடம் வாங்கி கட்டி கொள்ள மனமில்லாமல்.
தாய்க்கு விக்கல்:
மகன் தான் தன்னை நினைக்கிறான் என்று எண்ணி மகிழ்கிறாள்,
"பாவம் தான் அவன்? ஒரு மகள் இருந்திருந்தால் என்னை அவள் வீட்டில் வைத்து பார்த்திருப்பாள்" என்று மனதுக்குள் இன்னொரு கவலையையும் சேர்த்துக்கொண்டு குறுகினாள்.

எழுதியவர் : செல்வமணி (3-May-16, 12:04 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 141

மேலே