என்_காதல்_கிறுக்கல்கள்நிஜத்தின் சாரல்
============================================
என்_காதல்_கிறுக்கல்கள்:
============================================
என் பெயர் திருமால் நானும் என்னுடைய இளைமை காலத்தில் அதாவது என் கல்லூரி காலங்களில் காதல் வயப்பட்டேன்..!
என் முதல் காதல்..,
என் முதல் தேடல்.., என்னவளாகா தான் இருந்தால்...!
என் முதல் நாள் கல்லூரி காலம் தொடங்கியது, அன்றே என் முதல் காதலும் அவளுடன் சேர்ந்து பயணிக்க தொடங்கியது...!
என் நண்பர்கள் யாரிடமும் கூறவில்லை அவளை நான் காதல் செய்ததை...!
ஒரு வருடமாகா அவள் மீது ஒரு தலைக் காதலாகவே தொடர்ந்தது...!
அந்த ஒரு வருடத்தில் ஒரு தடவைக் கூட அவளிடம் பேசியது இல்லை...!
"காலங்கள் கடந்தாலும் என் காதல் அவளை விட்டு மாறவில்லை"..!
--------------------------------------------------------------------------------------------------------------------
இரண்டாவது வருடத்தின் முதல் ஆறு மாதம் முடிந்தது..,அப்போழுதும் அவளிடம் பேச முடியவில்லை..!
என் நண்பன் ஒருவனால் அவள் தொலைப்பேசி எண் கிடைத்து தொலைப்பேசி கிடைத்த அன்று இரவு அவளுக்கு குறுஞ்செய்தி(மெசேஜ்) ஒன்று அனுப்பினேன்...!
என்னவளின் முதல் முதல் பேச்சு என்னுடன் அந்த தொலைப்பேசியில் தான்...!
பேசினோன் இரண்டு வாரங்கள் ஆகினா...,
என் காதல் அவளிடம் சொல்ல ஆவளாகா இருந்தது...!
கூறினேன் என் காதலை அவளிடம் ஏற்றுக் கொண்டால் அவளும் என் காதலை...!
அப்போது தான் என் வாழ்கையின் அத்தனை ஆனந்தமாகா இருந்ததேன்...!
காதல் செய்தோம் இரண்டு வருடமாகா..,வண்ணத்துப் பூச்சிகளாய் சுற்றி திரீந்தோம் அந்தக் கல்லூரியில்..,
அவள் மீது நான் கொண்ட காதலுக்கு அளவே கிடையாது...,
அவளும் அப்படித்தான் இருந்தாள்...!
என் முதல் காதல் அவளுடன் தான்...,
என் முதல் முத்தம்,கட்டியணைத்த பெண் எல்லாமே அவள் தான்..!
என் கல்லூரி காலம் முடிந்தது.. அவள் பிரிவை என்னாலும்..!
என் பிரிவை அவளாலும் தாங்கி கொள்ள முடியவில்லை..!
என் விழியில் விழுந்தாள்,இதயம் தந்தாள்,நானும் அவள் காதலில் விழுந்தேன்,நெஞ்சம் பார்த்து நேசம் கொண்டேன்.!
என் தாய் தந்தையர்க்கு அறிமுகம் செய்து வைத்தேன் .!
எனை ஈன்ற தாயோ உனக்குப் பிடித்திருக்கிறதா என்று கேட்டாள்..,நான் ஆமாம் என்றேன்..!
எங்களுக்கும் பிடித்திருக்கிறது என்று ஒரே வார்த்தையில் என் காதலுக்குப் பச்சை கொடி காட்டி விட்டனர்.!
அன்றிலிருந்து சிறகடித்துப் பறக்கும் சிட்டுக் குருவிகளாய் ஒரு ஜோடி காதல் பறவைகளாய் இரண்டாண்டு காலங்கள் சுற்றித் திரிந்தோம்.!
எங்களைக் கண்டு எல்லோரும் பொறாமை கொள்ள கண் படாமல் என் காதலை காத்தேன்..!
அவளோ தன் தாய்,தந்தையிடமிருந்து தன் காதலை மறைத்தாள்.!
எத்தனையோ முறை சொல்லிவிடு சொல்லிவிடு என்று நான் சொல்லியும் சொல்ல மறுத்தாள்.!
இதனால் சிறு சிறு சண்டைகள் ஆரம்பித்தன..,
இதனால் அவளுக்கு இவன் மீது இருந்த காதல் குறைய தொடங்கியது...!
அவள் அவனை பார்த்து உனக்கு என்மேல நம்பிக்க இல்ல அதனாலா தான் நீ இப்படி பேசுற எங்கிட்ட..., அப்படினு ஒரு அழுகை அப்புறம் நானும் சமாதணம் ஆனேன்...,
இப்படியே இரண்டு மாதங்கள் கடந்தன..!
-------------------------------------------------------------------------------------------
ஒரு நாள் திடீரென என்று ஒருவன் எனக்கு தொலைப்பேசியில் அழைத்தான்...!
நான் யார் என்று கேட்டேன்...!
நீ காதல் செய்கிறயே அவள் மாமன் என்றான்...,
அவளை மறந்து விடு என்று சொல்லி அவன் தொலைப்பேசியை தூண்டித்தான்...!
ஆனால்,அவன் சொன்னதை என் மனம் ஏற்க வில்லை...,
அதன் பிறகு என் காதலி அழைத்தாள் அவளிடம் கேட்டேன்...! அவன் யார் என்று...,
அதற்கு அவள் கூறிய பதில்,அவர் எங்க அத்தை மகன் என்றாள்...,
நான் அவன் கூறியதை அவளிடம் சொன்னேன்...
அதற்கு அவள் கூறியது அவர் என்ன காதல் செய்கிறார் ஆனால்...,
நான் உன்னதான் தான் காதலிக்கிறேன் என்றால்....!
நானும் சமதானம் ஆனேன்...,
அதன் பிறகு எனக்கு இரண்டு,மூன்று நாட்கள் இடைவெளி விட்டு அழைக்க ஆரம்பித்தாள்...!
நானும் பொறுத்துக்கொண்டேன்.
என் பொறுமையையும் தாண்டி ஒருநாள் அவளிடம் கேட்டேன்...!
ஏன் நீ மூன்று நாட்கள் கழித்து எனக்கு அழைக்கிறாய் என்றேன்..!
அவள் கூறிய பதில் ...,
உயிராய் உணர்வாய் எண்ணிய காதலி என் உறவு வேண்டாம் என்று மறுத்துவிட்டாள்.
---------------------------------------------------------------------------------------------------------------
என் உடம்பில் உயிர் இல்லை..
இதயத்தை யாரோ கசக்கிப் பிழிவது போன்றதோர் உணர்வு..
வலி என்றால் காதலின் வலி தான் வலிகளில் பெரிது,என் வாழ்க்கையும் சிறிது.
ஏன் மறுத்தாள் என்று தெரியாமல் தேடினேன் தேடினேன்.! காரணத்தைத் தேடினேன்...!
காதலை,காதலிக்க அருகதை அற்றவள் என்று எண்ணி அவளிடமே காரணத்தைக் கேட்ட பொழுது அதிர்ந்தேன்.!
என் உயிரினுள் புகுந்து என்னுள் வாழ்ந்தவள்,
இன்றோ வேறொருவனை விரும்புவதாய் கூறுகிறாள்.!
என் உண்மைக் காதலை ஏற்கவில்லை.,
என் பணத்தையும் ஏற்றமிகு வாழ்வையும் மட்டுமே விரும்பி இருக்கிறாள்.?
வெற்று காகிதத்திலும்,கவிதையிலும் வருவதில்லை காதல்.!
வெறும் பணத்தாலும்,பகட்டான வாழ்விலும் வருவதில்லை காதல்.!
குணத்தாலும்,குலப்பெருமையிலும் வருவதுவே காதல்.!
-----------------------------------------------------------------------------------------------------
இதயத்து அன்பில் பிறப்பதுவே காதல் என்று உணர மறுத்தாள்.!
என்னை விட்டு விலகிச் சென்றாள்.
அவளுக்காக எத்தனையோ தியாகங்கள் செய்திருக்கிறேன்.!
இன்று அவளையே தியாகம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டேன்.!
என் காதலை இறுதி வரை புரிந்து கொள்ளவே இல்லை அவள்.!
அவளை என் மனைவியாகவே எண்ணி வாழ ஆரம்பித்து விட்டேன்..!
யாரைக் காணினும் அவளின் தோற்றம்., பித்துப் பிடித்தவன் போல் அறைக்குளே அடைந்து கிடந்தேன்..!
என் தாய் தந்தையருக்காக
ஏதோ உண்டேன்.!
ஏதோ உறங்கினேன்.!
நான் செய்த பிழை என்னவென்று தெரியாமல் குழம்பினேன்.!
தெளிவு பெற பல கோவில்களுக்கும் சென்றேன்.!
நான் காதலில் தோற்றதாய் இதை படிப்பவர்கள் நினைக்கலாம்..!
காதலில் தோற்றது நான் இல்லை..,
அவள் தான் என்று மேலும் படித்தால் என் கதை உங்களுக்கே புரியும் .!
---------------------------------------------------------------------------------
நல்லதோர் குடும்பத்தை இழந்துவிட்டாள்..,
தன் மகளாய் நினைக்கும் என் தாயும் தந்தையும் இழந்து விட்டாள்...!
வாழ்க்கையின் வெறுமையை நோக்கிப் போய் விட்டாள்..!
----------------------------------------------------------------------------------
அவள் விட்டுப் போன காதலை நான் தொட்டுப் பார்க்க ஆசைப் படவில்லை..,தாடி வளர்க்க வில்லை...!
போதையில் தள்ளாட வில்லை,தம் அடிக்கவில்லை...!
எந்த தீய பழக்கங்களும் எனக்கு இல்லை...!
அவள் விட்டு சென்ற பின்னும் எதற்கும் அடிமையாகவில்லை...!
ஆனால்,அவளை மறந்தவன் போல் என்
அன்னையின் முன் நடித்தேன்...!
புரிந்து கொண்டு ஆறுதலாய் இருந்தாள்,,
--------------------------------------------------------------------------
ஆறு மாதங்கள் அறைக்குள்ளேயே உமையாய் அழுது கொண்டே இருந்தேன் ....!
இரவில் உறங்க மறுத்தது என் இமைகள்..,
இமைகள் மூடினால் அவளின் உருவம் ..,
இமை திறந்தாலோ கண்ணீர்த் துளிகளில் அவளின் நினைவு ......!
மறக்க நினைக்கிறேன் முடியவில்லை..,
மறுபடி மறுபடி அவளின் நினைவு..,
என் வாழ்க்கை இவ்வளவு தானோ ?
என்னைப் படைத்த ஆண்டவன் என் வாழ்க்கை டையிரை வெற்று காகிதமாய் விட்டு விட்டான் போலும்...!
கல் நெஞ்சம் கொண்டவனாய்க் கடவுள்.
-----------------------------------------------------------------
இமயம் முதல் குமரி வரை எல்லா ஆலயங்களுக்கும் சென்று இறைவனை வழிபட்டேன்,
தெளிவு பிறந்தது .
விதியின் பிடியில் நாம் எல்லோரும் ஒன்று .
-------------------------------------------------------------------
என் பெயருக்குப் பக்கத்தில் அவள் பெயரை எழுதவில்லை என்று மனதிற்குள் ஆறுதல் அடைந்தேன்.
தெளிவு பெற்றவனாய் ஆன்மீகத்தை நாடிப்போய் கொண்டு இருந்த என்னை புதியவளாய் வந்தவள் தடுத்தாள்..
என் கதை முழுவதும் தெரிந்தவள்..,
இவளோ என் காதலைப் பற்றி முழுவதும் அறிந்தவள்..!
தான் என்னைக் காதலிப்பதாய் சொல்லுகிறாள். நானோ மறுத்து விட்டேன் ;
---------------------------------------------------,,,,,,
மீண்டும் பழைய அத்தியாயத்தைப்
புதுப்பிக்க எனக்கு விருப்பம் இல்லை..!
தோல்வி எனக்குப் புதிதல்ல...
என் மீது உண்மைக் காதல் கொண்டுள்ளதை வெளிப்படையாக சொல்லுகிறாள்..!
ஏற்பதா ? மறுப்பதா ? ஏங்கித் தவிக்கிறது இதயம்...!
என் கதை முழுவதும் தெரிந்தவள் என்னைப் புரிந்து கொள்வாள் என்று எண்ணுகிறது என் மனம்..
இருப்பினும் இவளின் காதல் என் மீது ஏற்பட்ட பரிதாபத்தினால் வந்ததா ? இல்லை பரிசுத்தமானதா?
---------------------------------------------------------------------------
ஒன்றும் புரியாமல் ஒருவரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாமல் தவியாய் தவிக்கிறது என் இதயம் தனிமையில்..,
என் வினாக்களுக்கு விடைதேடி விடைதேடி களைத்துப் போகிறது என்நெஞ்சம்...!
என் நிலைமை எதிரிக்கும் வேண்டாம்.
காதல் என்னைக் கொல்கிறது....!
----------------------------------------------------------------------------
"காலங்கள் கடந்தாலும் என் காதல் அவளை விட்டு மாறவில்லை"....!

