சிறு சேமிப்பு --போட்டிக் கட்டுரை --முஹம்மத் ஸர்பான்

உயிர்வாழ் இனங்கள் அனைத்தையும் இயற்கை அனர்த்தங்கள் சிதைத்து விடுகின்றன.இவை சகல உயிர்வாழ் இனங்களின் மகத்துவத்தை எமக்குப் புலப்படுத்துகின்றன.இயற்கை அன்னை தனது அதிகாரத்தை நன்மைக்காக அல்லது அழிவுக்காகப் பயன்படுத்தும் போது அவள்,தேசியம்,சாதி வர்ணம் போன்ற பல தரப்பட்ட வேறுபாடுகளை பொருட்படுத்தாமல் செயற்படுகிறாள்.மனித சமூகத்தைச் சேர்ந்த நாம் அனைவரும் இவ்வழகிய நீலக் கோலத்தின் பிரசைகளாகவே விளங்குகின்றோம்.

இருந்தும்,சுற்றாடலைப் பாதுகாத்து விட முடியுமா? என்றும் கேள்விகள் எழலாம்.கேள்வி இது தான் நாம் எவ்விதம் இப்பூமியில் உள்ள தண்ணீரைப் பகிர்ந்து கொள்வது? யதார்த்த பூர்வமாகப் பார்க்குமிடத்து மனிதனுக்கும் நிலத்திற்கும் தண்ணீர் தேவைப்படுகிறது.நாம் இந்தக் கிடைப்பதற்கரிய நமது உற்ற தோழனான தண்ணீருக்கு இரண்டு வழிகளில் தீங்கிழைக்கிறோம்.ஒன்று அசுத்தப்படுத்தல்.மற்றையது
விரயம் செய்தல்.

தண்ணீரை நாம் பல வழிகளில் அசுத்தப்படுத்துகிறோம்.பெரிய தொழிற்சாலைகளே கழிவுகளை வெளியேற்றி நதிகளையும் நீரோடைகளையும் அசுத்தப்படுத்துவதாக நாம் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.இவர்கள் மீது மட்டும் குற்றம் சுமத்த முடியாது.இப்பாரிய நிறுவனங்கள் கழிவை மீள பயன்படுத்துவதற்கான கண்டிப்பான சட்டங்கள் உலகில் பெரும்பாலான நாடுகளில் கொண்டு வரப்பட்டுள்ளன.இந்நிறுவனங்கள் சுற்றாடலுக்கு ஏதாவது தீங்கிழைத்தாலும் அவை நிலைமையை சிராக்குவதற்கு உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சட்டபூர்வமான கடப்பாட்டினை கொண்டுள்ளன.

மனிதர்கள் நாளாந்தம் தண்ணீரை விரயம் செய்தல்.அதனை அசுத்தப்படுத்தல் போன்ற வேதனைக்குரிய சமூக விரோதச் செயல்களுக்கு தீர்வு காண்பதே இன்று நாம் எதிர்நோக்கு பெரும் சவாலாகும்.நாம் கடற்கரையில் கழிவுகளை வீசுகிறோம்.கிருமி நாசினிகளையும்,இரசாயன உரத்தை பயன்படுத்தல், எண்ணெய்,பற்றரி போன்ற தீங்கிழைக்கக்கூடிய கழிவுகளை பாதுகாப்பற்ற இடங்களில் வீசுதல், விலைமதிப்பற்ற தண்ணீரை அசுத்தப்படுத்தக் கூடிய அளவுக்குச் சவர்க்காரம்,சலவை இரசாயனங்களைப் பயன்படுத்தல் போன்ற செயல்களை செய்கின்றோம்.இதனால் ஏற்படக்கூடிய
பாரதூரமான விளைவுகளை நாம் சிந்திப்பதில்லை.

உலகத்தில் பிறந்த ஆறறிவு மனிதர்களாகிய நாம் அவதானமாக நடந்து கொள்ளாவிட்டால் நாமும்
தீங்கிழைப்பதற்கு பங்குதாரர் ஆகிவிடுகிறோம்.வாகனங்களிலிருந்து வெளியேறும் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் கடினமான கறுப்புப் புகை சுற்றாடலில் காற்றோடு கலந்து,இறுதியில் தரையில் நீரோடையில்,ஆற்றில்,ஏரியில் அல்லது சமுத்திரங்களில் சங்கமமாகிறது.அங்கு மீன்களுக்கு நச்சுத்தன்மையை ஊட்டி செயலை இவைகள் செய்து விடுகின்றன..நாம் வீசிய கழிவுகளை உண்ணும் மீன்கள் இறுதியில் நமது சாப்பாட்டு மேசையில் வருவதை யாரும் சிந்திப்பதில்லை.

ஒரு துளி நீரை பத்திரமாய் நாம் பாதுகாக்கிறோம் என்றால் இன்னும் உலகத்தில் வாழ்ந்திட ஆயிரம் உயிர்களை காக்கின்றோம்.ஆனால் நாம் வீண்விரயம் செய்யும் ஒரு துளி நீரினால் கோடிக்கணக்கான
உயிர்களின் மரணம் விலை கொடுத்து வாங்கப்படுகிறது.உலகில் நீரை நாம் சேமிக்க தவறியதால் தான்
பல உயிர்கள் மண்ணில் கற்கள் குன்றுகள் போல் பரவிக்கிடக்கும் கோரமான காட்சிகளை கறுப்பின தேசத்தில் கண்டு கண்கள் கலங்கினோம்.அதை போல் இந்த உலகில் நேர்ந்தால் மனிதனின் உலகும்
கல்லறை தோட்டமாய் மாறிவிடும்.சிறு துளி சேமிப்பால் உலகம் எனும் பரமப்பதம் காக்கப்படுகிறது.

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (3-May-16, 12:09 pm)
பார்வை : 3295

சிறந்த கட்டுரைகள்

மேலே