இயற்கை சித்த வைத்தியக் குறிப்புகள்

1. அம்மை நோயைத் தடுக்க புளிய மரத்தின் கொழுந்து இலையையும், மஞ்சளையும் மைய அரைத்து குளிர்ந்த நீரில் போட்டுக் குளித்து வந்தால் அம்மை நோயைத் தடுக்கலாம்.

2. நீரிழிவு நோய் தீர, பாகற்காயைச் சுத்தம் செய்து வெயிலில் காயவைத்து இடித்து தூள் செய்து டப்பாவில் வைத்துக் கொண்டு தினசரி உணவுக்கு முன் மூன்று வேளை சாப்பிட்டு வர இரண்டு நாட்களில் குண பெறலாம்.

3. உண்ணாவிரத மருந்தாக எலுமிச்சம் பழத்தில் நாம் உயிர் வாழத் தேவையான அனைத்துச் சத்துக்களும் உள்ளன.எலுமிச்சை சாற்றை குடித்தால் உடல் மயக்கம் தீரும்.

4. காமாலை நோய் குணமாக பூவரசு இலைக் கொழுந்துடன் 6 மிளகு சேர்த்து மைய அரைத்து சுண்டைக்காய் அளவு மோரில் கலந்து தினசரி மூன்று வேளை சாப்பிட்டு வர ஐந்து நாட்களில் குணமாகும். உப்பு இல்லாத பத்தியம் இருப்புதுடன் இளநீர் சாப்பிட்டு வரலாம்.

5. ஞாபக சக்தி வளர்க்க கேரட், பசுவின் பால், தேன் இம்மூன்றையும் வகைக்கு ஒரு ஸ்பூன் வீதம் சாப்பிடுவதுடன் வெண்டைக்காயுடன் பனங்கற்கண்டையும் சேர்த்துச் சாப்பிட்டு வர ஞாபக சக்தி பெரும்.

6. குழந்தைகளுக்கு சளி, இருமல் போக்க ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெயுடன் கற்பூரத்தையும் போட்டு கிண்ணத்தைச் சூடேற்றி மார்மீதும், முதுகுபுறமும் தடவி வர சளி, இருமல் குறையும்.

7. ஒரே நேரத்தில் தேனையும், நெய்யும் சம அளவு கலந்து சாப்பிடக்கூடாது. இது மயக்கம், வாந்தியை ஏற்படுத்தும்.

8. நெஞ்செரிச்சல் நீங்க சுத்தமான சந்தனக் கட்டையை நீர்விட்டரைத்து சிறிதளவு எடுத்து ஒரு டம்ளர் நீரில் கலக்கிச் சாப்பிட நெஞ்செரிச்சல் நீங்கும்.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு முகநூல்) (4-May-16, 8:47 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 118

மேலே