ஜோதிடத்தில் அட்சய திருதியை
இந்த வருடத்தில் அட்சய திருதியை (திதி) 8-மே-2016 அன்று இரவு 9:02 மணிக்கு ஆரம்பித்து 9-மே-2016 மாலை 7:10 வரை இருக்கும்.
தமிழ் வருடத்தில், முதல் மாதத்தில் மேஷத்தில் உச்சம் பெறும் சூரியனும், ரிஷப ரோஹிணி நட்சத்திரத்தில் உச்சம் பெறும் சந்திரனும் வரும் திதி அட்சய திருதியை என்று போற்றபடுகிறது. இருவரும் உச்சம் பெறும் ஒரே திதி இது என்பதால் மேலும் சிறப்பு. கீழ் இருக்கும் ராசி சக்கரத்தில் காணலாம்.
அட்சய - வளருதல், எப்போதும் குறையாதது என பொருள் . திருதியை (திரி + திதி) - அமாவாசையில் இருந்து மூன்றாம் நாள். வளமும் முன்னேற்றமும் தரும் "சித்திரை மாத மூன்றாம் பிறை" என்பதே இதன் பொருள்.
உயிர் மற்றும் ஆன்ம காரகன் சூரியனும், உடல்/மன காரகன் சந்திரனும் உச்சம் பெற்று இருப்பதால் இந்நாள் சிறப்பு பெறுகிறது அவ்வாறு இருவரும் உச்சம் பெற்று, உயிர் காரகன் சூரியன் தான் நீசம் பெறும் ராசி துலாம் மீதும் மற்றும் உடல் காரகன் மற்றும் மன காரகன் சந்திரன் தான் நீசம் பெறும் விருச்சகத்தின் மீதும் தன் பார்வையை செலுத்தி சுபதன்மை பெற செய்கிறனர். மேலும், அட்சய திருதியை அன்று கால புருசனின் இரண்டாம் இடத்தில் உச்சம் பெறும் சந்திரனால், கல்வி அறிவு, செல்வம் மற்றும் புகழ் பெறுவார்கள் என கொள்ளலாம்.
ஆரோகணத்தில் (சுக்ல பட்சம் ) பயணிக்கும் சந்திரன், சித்திரை சந்திரனாக ஒளிவீசும் பௌர்ணமியும் இந்த அட்சய திரிதியை புள்ளியில் இருந்து தொடங்குவது சிறப்பு.
அட்சய திருதியில் செய்யவேண்டியவை
===========================================
இந்த தினத்தில் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தெய்வான செயல்கள் செய்வது சிறப்பு. குறிப்பாக கல்வி பெறுதல், அன்னம் மற்றும் வஸ்திரம் தானம் செய்தல், பெரியோர்களை தரிசித்தல், புத்தகங்கள் வாங்குதல் மற்றும் கொடுத்தல், இறைவழிபாடு, முதலீடு செய்தல் போன்றவை ஜோதிடத்தில் பரிந்துரைக்க படுகிறது. இதனால் இந்த தமிழ் வருடம் முழுவதும் புண்ணியங்கள் சேரும் என்றும், வாழ்க்கை வளம் பெறும் என்றும் நம்பிக்கையூடப்படுகிறது.
(அட்சய திருதியை அதிகாலை சித்தர்கள் ஜீவ சமாதிக்கு செல்லுங்கள். தியானம் செய்யுங்கள் அதிக உணர்வலைகளை உணர்வீர்கள்)