குழந்தை தொழிலாளர்

வறுமையின் கோட்டை அழிக்க அனுப்பி வைக்கப்பட்டார்கள்..
அழிந்தது
வருமைனூடே கனவுகளும்….
ஒரு பிடி சோறு
இப்பொழுதே கற்றுக்கொண்டார்கள்
உழைப்பே மூல தனம் என்று…
கூட்டல் கழித்தல்
கணிதத்தின் காரணிகள்
தீக்குச்சிகளாகின்றன...
மணல்கள் அரித்து
செங்கற்கள் அடுக்கும் போது
தொழிற்கல்வி கற்றுக்கொள்கிறார்கள்...
இடை இடையே
வாழ்கை பாடம் என்ன என்பதை புரிந்து கொள்ள
துன்பங்களும் துயரங்களும்...
குழந்தை தொழிலாளி
கால மாற்றத்தில்
பெயரும் மாறி விடுகிறது
தொழிலாளி.
இன்றும் உழைக்கிறார்கள்...
கனவும் கோடும் தான் இன்னும் அழியவில்லை…