மரம் சொன்னது அதுமட்டுமா அதுக்கும்மேல
மண்ணில் செடியானேன்,
செடியாய் மரமானேன்,
மரமாய் நிழல்தந்தேன்,
நிழலாய் குடையானேன்,
அதுமட்டுமா
அதுக்கும்மேல
பூவாய் அழகானேன்,
அழகாய் காய்தந்தேன்,
காயாய் கனியானேன்,
கனியாய் உணவளித்தேன்,
உணவாய் உயிரானேன்,
அதுமட்டுமா?
அதுக்கும்மேல...,
மரத்தை வளர்த்து விடு,
இல்லையேல்,
இருப்பதை வெட்டாமல்
இருந்து விடு.,