பெண்மை
அழகுக்கு அப்பால் போய் அவள் அறிவை காண்
வசைமொழியில் ஒளிந்திருக்கும் அவள் அன்பை காண்
ஆணவத்தில் மறைந்திருக்கும் ஆளுமையை காண்
நச்சரிப்பை தாண்டியிருக்கும் அரவணைப்பை காண்
பெண்மை என்னும் அகல்விளக்கை ஏற்றிடு
அதில் குடும்பம் ஒளிவீசும் காட்சியை கண்டிடு
வசைமொழியும் நச்சரிப்பும் நன்மைக்கே என கொள்
அறிவும் ஆளுமையும் உயர்வுக்கே என சொல்.
Pic courtesy: voice4her