தேசத்துரோகம் கவிதை பெரிதாய்

மரபணுக்களில்
வீரியம் மறைத்த
மேலைத்தேசமே
நீ அறிவாயா?
என் பாட்டனின்
பல்லுக்கு
கரித்துண்டே
பற்பசை..
அறிவாளிகளின்
கொள்வனவுக்
களஞ்சியமே
உனக்கு புரியுமா?
என் பாட்டியின்
அழகு
நிறங்களால்
பகிரப்பட்டதல்ல...
கைபேசிகளின்
கருப்பையே
உன் காலங்கள்
கருதுமா??
எங்கள்
பொழுதுபோக்கு
உடற்பயிற்சிக்கும்
ஒருபடி உயர்வென..
கழிவுகளை
காசாக்கும்
கணினிமேதைகளே
உன் கண் காணுமா?
எங்கள்
ஆதிய தேசத்தின்
கழிவுகளில்
கருக்கொண்ட
உயிரிகளே நீங்களென.
வருத்ததிற்குரிய
உண்மை_நாங்கள்
சமகாலத்து
பேராசைப்பிராணிகள்..
எங்கள்
விதைகள்_உங்கள்
விளம்பரச்
சின்னங்களாகவே
விளைகிறது!
உன் அறிவை
போற்றுவதா
எம் அறியாமையை
நோவதா..
அடிமைகளுக்கு
பதில் ஆசைகளை
உருவாக்குகிறாய்!
மேலைத்தேசமே
நீ போற்றலுக்குரிய
புரட்சியாளன்...
ஆசைகளே
இங்கு அடிமை
திசைகளெங்கும்
உன்னை நீயே
நிர்மானித்திருப்பதால்
எம் பருவங்கள்
உன்னால்
தீர்மானிக்கபடுகிறது!
நாம் வெறுக்கிறோம்
எங்களின் மனிதர்களை
ஆராதிக்கிறோம் உங்களை
அராஜகம் எங்களுடையது
ராட்சியம் உங்களுடையது...
நேசத்துக்குரிய
மேலைத்தேசமே
உன்னால் ஆழப்படும்
ஒருவன்
உயர்வானவனே
உண்மை
என் இயற்கையோடு
நான் வாழும்வரை
உன் செயற்கை
கவனிக்கப்படுவதில்லை
கவனம்கொள்.
தொலைக்காட்சி
விளம்பரங்களில்
விலைபோன
துரோகிகளே!!
யாரேனும்
உள்ளீர்களா??
இது என்
இயற்கையென
பரிந்துரைக்க..
வருத்தத்திற்குரிய
உண்மை
தென்னை மரங்களின்
கீழே குளிர்பான
புட்டில்கள்