குழந்தை தொழிலாளி
தாய் என்ற தேவதை - தாயகம் திரும்பும் வரை
நானோ சம்பளமில்லா வேலைக்காரி
வயது ஏழு தான் - இருப்பதும் அண்ணி வீடு தான்
உண்பதும் தாயின் செலவில் தான்
இருந்தும் நான் சம்பளமில்லா வேலைக்காரி
தாயிடம் சொல்ல வழி இல்லை - தபால் போட
பயிலவும் இல்லை - தொலைப்பேசி
அழைப்புக்களும் தொலைவில் தான் கிடைகின்றன
என் செய்வேன் நான் - தாயே
நீ தாயகம் திரும்பும் வரை ?