இந்த முதல்வர்தான் வேண்டும்

சொன்னதைச் செய்தேன்
சொல்லாததையும் செய்தேன்
என்னும் அரசியல் வாதிகளின்
பழமொழிகளைக் கேட்கும்
மக்கள் கூறும்
புதுமொழிகள்

1. சொன்னதைச் செய்தீர்கள் அம்மா
சொல்லாததையும் செய்தீர்கள் அம்மா
இப்போது நீங்கள் வரலாம்
என நாங்கள் கூறும் போது
வாருங்கள் போதும் !!!!!!!!!!!!!!!!!!!!!!

2. விவசாயிகளுக்கு யூரியா
வழங்க முறைசெய்த ஐயா
நீர் வழங்க கண்டுகொண்ட
பிறகு வாருங்கள் போதும் !!!!!!!!!!!!

3. பயிர் கடனைத் தள்ளுபடி
செய்ய நினைக்கும்
மருத்துவ ஐயா
ஜாதிக் கட்சி என்ற
பெயரைத் தள்ளி விட்டு
பிறகு வாருங்கள் போதும் !!!!!!!!!!!!!!!!!!

4. மாதாமாதம் மின்கட்டணம்
முறை கொண்டு வரும்
தளபதியாரே 2ஜி 3ஜி
குழப்பங்களை முடித்து
விட்டு வாருங்கள் போதும் !!!!!!!!!!!!!!!!!!!

5. இலவசங்களைக் கண்டு
எமாராதேயுங்கள் என
முரசுக் கொட்டும்
கேப்டன் அவர்களே
உளறாமல் பேச
கற்றுக் கொண்டு பிறகு
வாருங்கள் போதும்!!!!!!!!!!!!!!

6. இனி வரும் காலத்தில்
நாங்கள் எதிர்பார்ப்பது
ஒவ்வொரு கவுன்சிலரும்,
எம்.எல்.ஏ வும் மாதம்
இருமுறை அந்தந்த
பகுதிகளுக்கு வந்து
அப்போதே குறைகளை
கேட்டு நிறைவு செய்வது

7. வரும் புதிய முதல்வர்
ஆறு மாதத்திற்கு ஒரு முறை
தங்கள் மாநிலத்தில் உள்ள
மாவட்டங்களுக்கு சென்று
முன்னேற்றங்களையும் ,
பின்னேற்றங் களையும்
அறிந்து தங்கள் மாநிலத்தை
மேலும் வளர்ச்சிப் பாதையில்
கொண்டு செல்லுதல்

8. முக்கிய தொழில்கள்
முன்னேற்ற மடைய
விளைப் பொருள்கள்
அத்தியாவசியப் பொருட்களின்
தரமும் தேவையும்
கருதி அவைகளுக்கு
முக்கியத்துவம் தருதல்

9. இலவசங்களுக்கு பதில்
மக்களை சுயமாய் சம்பாதித்து
முன்னேற சிறு தொழில்
தொடங்க ஊக்குவித்தல்

10. அக்காலத்தில் மக்களின்
நிலை அறிய மாறுவேடம்
புனைந்த மன்னர்களைப்
போல் மக்கள் உடல் நலம்,
கல்வி அறிவு, குடும்ப வளர்ச்சி
இவைகளை அறிந்து
ஆட்சி செய்யும்
முதல்வரே வாருங்கள் போதும் !!!!!!!!!!!!!

எழுதியவர் : பெ. ஜான்சிராணி (6-May-16, 7:21 pm)
பார்வை : 206

மேலே