அம்மா

பத்து மாதங்கள் என்னை
தன் கருவறையில் சுமந்த தாயே..

ஒன்பது கிரகங்களை போல் என்னை
உன் கண்ணின் கருவிழியை போல்
பாதுகாத்த தாயே...

எட்டு திசைகள் தேடினாலும் கிடைக்காது
என் தாயின் அன்புக்கு சமமான ஒன்று...

ஏழு அதிசயங்கள் என்று
எதை எதையோ சொல்கிறார்கள்
அவர்களுக்கு எப்படி தெரியாமல் போனது
உலகின் அதிசயம்
தாய் மட்டும்தான் என்று...

அறுபடை வீடுகளும் கண்டிருக்காது
தாய் என்னும் தெய்வத்தை...

ஐம்பெரும் காப்பியங்களை போல்
எனக்காகவே வாழும் தாயே...

நான்கு வேதங்களில் சொல்ல தவறிய
நற் செயல்களை கூட
என் நல்வாழ்விற்காக கற்றுக்கொடுத்த தாயே...

முக்கனியை போல் நானும்
சிறப்பாக வாழ வேண்டும்
என்றுதான் எனக்கு கனி
என்று பெயர் வைத்தாயோ...

உன் இரு பாதம் தொட்டு
வணங்கி சொல்கிறேன் தாயே...

என் ஓர் உயிர் நீதான்
என்று......

-தமிழ்கனி-

எழுதியவர் : தமிழ்கனி (6-May-16, 10:38 pm)
Tanglish : amma
பார்வை : 384

மேலே