தூங்கும் விழிகளில் துயரம்

சங்க தமிழன்று செழித்த நாடுடா,
தங்க தமிழின்று தளரந்தது ஏனடா?
அங்கம் அனைத்திலும் ஆங்கிலமேனடா?
பங்கம் பறக்க படையெடுக்காதது ஏனடா?
ஏங்கும் எந்தமிழுக்கு ஏற்றம் எப்போதடா?
தூங்கும் விழிகளுக்கு துயரமேனடா?
சிங்கம் நீ சீறீயெழுந்தால் மானிடா,
மங்கும் மாதமிழ் மண்ணில் வாழுமடா!

எழுதியவர் : சிவகுமார் (7-May-16, 11:48 am)
சேர்த்தது : சிவகுமார் முத்து
பார்வை : 63

மேலே