குழந்தை தொழிலாளர்கள்

பள்ளி புத்தகங்களை
நாங்கள் சுமக்கிறோம்
படிப்பதற்காக அல்ல
பசியை போக்குவதற்காக ..!

பட்டாசு செய்கிறோம்
வெடிப்பதற்காக அல்ல
வெறும் வயிற்றை
நிறைப்பதற்காக ..!

கல் உடைக்கிறோம்
கட்டிடம் சொந்தமாக
கட்டுவதற்கு அல்ல
கஞ்சி குடிப்பதற்காக ...!

சுமைகள் கூட
சுகங்கள் ஆகின்றன
எங்கள் குடும்பம்
பசியாறும் போது ...!

எழுதியவர் : உடுமலை சே.ரா.முஹமது (8-May-16, 10:56 am)
பார்வை : 89

மேலே