உழவர்

.....உழவர்.......

இறைவன் படி அளந்தாலும்....
இவன் உழுதால் தான்...
நமக்கு உணவு....

கண்ணாடி அறைக்குள்...
கணினி தட்டும் நமக்கு தெரிவதே இல்லை..
இவன் விடும் கண்ணீர்...

இந்தியாவின் முதுகெலும்பு...
விவசாயம் என்போம்...ஆனால்
விளைநிலங்களை...
விலைநிலங்களாய் ஆக்கட..
முதல்வரிசையில் நிற்போம்....

விவசாயி நமது தோழன் என்போம்..ஆனால்
அவன் துயரங்களுக்கு...
தோள் கொடோம்....

நம் ஊதிய உயர்வுக்கு...
உயர்த்துவோம் போர்க்கொடியை....ஆனால்
அவன் விளைவித்த பொருளுக்கு
அவன் விலைசொல்ல மறுப்போம்....

கலைந்த கேசமும்...
கசங்கிய ஆடையும்...
பஞ்சடைத்த கண்களுமாய்...
பாலிடாயிலுக்கு பலியாகிறானே...
அவன் அருமை நமக்கும்...
அரசாங்கத்துக்கும் தெரிவதில்லை....

விண்ணைமுட்டும் கட்டிடமும்...
விஞ்ஞானவளர்ச்சியும்...
ஒரு நாட்டின் உண்மையான..
வளர்ச்சியல்ல....
உழவு செழித்தலும்...
உழவன் சிறத்தலுமே...
உயர்ந்த வளர்ச்சி.....

அதாளபள்ளத்தில் பாயும்...
விவசாயத்தையும்...
அகால மரணத்தை...
ஆசையுடன் தழுவும்...
விவசாயையும் இனியாவது காப்போம்

....சக்தி கிருஷ்ணன்...
.......சென்னை...

எழுதியவர் : சக்தி கிருஷ்ணன் (10-May-16, 10:51 pm)
Tanglish : uzhavar
பார்வை : 46

மேலே