கருணை மழை

மாடி
மனைகளின்
வாசல்
தாண்டாத
கடவுள்
ஏழைக்
குடிசையின்
ஒழுகும் கூரை
வழியே
மழையாக உள்
நுழைகிறார்
குடிசை
வாசிகளைக்
குளிர்விக்க..
கொடுக்கிற
தெய்வம்
கூரையைப்
பிய்த்துக்
கொடுப்பதால்
வாங்குபவனும்
வழியின்றி
நனைந்து
கொள்கிறான்.

எழுதியவர் : சிவநாதன் (11-May-16, 9:21 am)
Tanglish : karunai mazhai
பார்வை : 188

மேலே