வெட்கம்

*
என்னைக் கண்டதும் எப்படி வந்ததோ?
அவள் முகத்தில் பூவின் வெட்கம்.
*
நெஞ்சில் சிறைப்பட்ட கனவுகள்
கல்லில் வடித்தான் சிற்பி.
*
பணம் கொடுக்கிறது வாங்குகிறது
வங்கிகளில் இயந்திரங்கள்.
*
மகிழ்ச்சி கிளையில் சிரிக்கும் இலைகள்
துக்கம் தரையில் உதிர்ந்த இலைகள்.
*
சோக அலை விற்பனைக்கில்லை
மோக வலை அமோக விலை.
*
இலவசம் பெறுவது அவமானம்
பெறாமல் இருப்பதே தன்மானம்.
ந.க.துறைவன்.

எழுதியவர் : ந.க.துறைவன் (11-May-16, 6:24 am)
Tanglish : vetkkam
பார்வை : 214

மேலே