தினம் ஒரு தத்துவ பாட்டு - 9 =101
“கனவு பறவைக்கு சிறகில்லை
ஆனாலும் அது பறக்கின்றது
மனித ஜென்மங்கள் கனவில்தான்
பாதி வாழ்வை கழிக்கின்றது”
உலகம் பிறந்த நாள் முதலாய்
நிலையாய் வாழ்ந்தவர் யாருமில்லை
அந்த வாழ்வை வாழ்வதாய்
கனவு காண்பதில் தவறில்லை
ஏழை காணும் கனவு
தானும் எஜமானென்ற நினைப்பு
ஊமை காணும் கனவு
தானும் பேசி மகிழ்கின்ற களிப்பு
கோழை காணும் கனவு
தானும் மாவீரனென்ற மிதப்பு
வேண்டாத ஆசைதான்
குழித் தோண்டுது வாழ்வுக்கு..!
எல்லா நோயுக்கும் மருந்துண்டு
ஆனால் கனவு நோயுக்கு மருந்தில்லை..
கனவுதான் ஒருவனின் தேவைகளை
பூர்த்தி செய்யும் பரம்பொருள்
ஜீவன் வாழும் நாள்வரை
மனிதன் கனவோடு குடித்தனம் நடத்துகிறான்
ஆயிரம் வசதிகள் இருப்பவன்தான்
அதிக கனவுகளை காண்கின்றான்..!

