ஆல மரக் கதைகள்

பொருள் அற்ற மையலில்
மாயச்சுவர் வட்டம்
இழக்கிறது...

காணும் பிறழ்வுத் தவிர
காட்சி செய்தல் காணக்
கிடைக்கிறது...

அடர் பனிக் குழுமத்தின்
கவிச் சுடர் கதிராக
பூவுடல் தளர்த்தல் தகும்....

சூடும் நிலக் கண்
தேடும் புறவயல் நிறத்தில்
தேனூற்றி உருமாறுகிறது கானகம்...

அவை தேடும் பிறைக்குள்
எட்டிக் குதிக்கும் கரை தாண்டிய
நீரின் நிறம் மாற்றிய உருவம்
எதுவெனவோ அதுவாகிறது...

அழுந்த அழுந்த காற்றைக்
கடக்கும் சிறு இறகின்
வாய் திறந்து கொத்துகிறது
தூர தேச சாத்தியங்கள்...

இப்படியாக அற்புதங்களின் கணங்களை
இடம் மாற்றி வழி மாற்றி
வீதி நகரும் விந்தையெனக் கூறுகிறது
ஆலமரக் கூடுதலின்
இரண்டாம் சாமக் கதை ஒன்று...

கவிஜி

எழுதியவர் : கவிஜி (11-May-16, 4:35 pm)
பார்வை : 92

மேலே