ஆதலினால் இவள் என் காதலி

இவள் கண்களில்
கயலும் மீனும் துள்ளவில்லை
இவள் புன்னகை
முல்லை மலர்ப் பூங்கொத்தில்லை
இவள் உடல் மொழி
உருவகிக்க முடியா உவமை
இவள் சொல்லும் செயலும்
அறிவின் வழி
ஆதலினால்
இவள் என் காதலி !

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (12-May-16, 8:59 am)
பார்வை : 77

மேலே