எங்கள் இருவரின் உயிரும் உடலும் பிரியாது ஒருபோதும்

என் இதயம்
வேகத்தை கூட்டுகிறது
( இதயம் உன்னை காண ஓடுகிறது
காற்றும்
உன் காற்றிற்காக தான்
நின்றுவிட்டது
நீ தூக்கிச் செல்வாய் என்று தானாகவே செயலிழந்து விட்டது காலும் ( & நானும் )
உன்னை பார்க்காமல்
உலகத்தில் வாழ்வது
பாரமானது
கொடுமையானது)
என் உயிரில்
காற்றும் ஸ்தம்பித்தது
கால் வலுவிழந்துவிட்டது
வாயில் நுரை
வேகமாக தள்ளுகிறது
இப்பொழுது இரத்தமும்
நித்தம் உன்னை பார்க்கும் கண்கள்
சொருகுகின்றன...
இப்பொழுதும்
எப்பொழுதும்
நீ தான் தெரிகிறாய் கண்ணில்
நீ கட்டிய தாலியிலேயே
எனை தாளித்துக்(தூக்கிட்டுக் கொல்(ள்)கிறேன்)
கொள்(ல்)கிறேன்
உனை மிகவும்....................
பிடித்ததினால்
என்னை தூக்கிக் கொள்ள
நீ இருக்க வேறு எதற்கு
நீ வந்து கொண்டிருப்பாய்
என இதயம் ஆர்பரிக்கிறது
கைகள் நர்த்தனம் ஆடுகிறது
இருண்டு கொண்டிருக்கும் உலகத்தில்
என் உயிரின் பொறி சிறிது எரிந்து கொண்டிருக்கிறது
உடல் தூக்கி போடுகிறது
இடையில் உன் மடி இன்றி
குருதியையும்
விஷங்களையும்
மறைக்கிறேன்
என்னை நீ காணும் வேளை
அன்போடு கட்டிக் கொள்ள வேண்டும்
அழுகையில்லாமல் என்று
கழுத்தில் உயிரை சுவாசிக்கும் தாலியை
நீ வாங்கிதந்த
நான் கட்டிக்கொண்டிருக்கும் சேலையால் மறைக்கிறேன்
உயிரின் உயிரே
உயிர்க்கொடி தானே
என் உயிரை அருக்க வேண்டும்
என்ன செய்தாலும்
உயிர் போகாது
உங்களை காணும் வரை
உங்கள் மடி சாயும் வரை
உங்கள் கையில் என் கை சேரும் வரை
நீங்கள் வந்துவிட்டீர்கள்
என்றே இதயம் இசைக்கிறது
காலும் ஓடி வர துடிக்கிறது
கையும் கட்டிக்கொள்ள பறக்கிறது
வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே வரும் வேளை
காற்றும் வேகமாக அடிக்கிறது
உங்களை பிடிக்க ஓடிவரும் வேளை மறைந்து மறைந்து போக்கு காண்பிக்கிறீர்கள்
உங்களை என் அருகில் வரவைக்க வேறு வழியின்றி
உண்மை மயக்கத்திற்கு நடுவில் போலியாக
மயங்குவது போல் நடிக்கிறேன்
என்னங்க என்று அழைத்துக்கொண்டே
ஒரு வேளை நடிப்பு உண்மையாகி விட்டால்
என்பதினால் தானாகவே உயிரை தேடுகிறேன்
நான் வீழ்ந்து கிடப்பதை பார்த்து ஓடிவருகிறார்
நான் எதிர் முனையில் பார்த்து பார்த்து என்று
அவரையே பார்த்துக்
கொண்டிருக்கிறேன்
விரைந்து என்னருகில்
என்னவர் வந்து அணைத்து மடியில் கடத்திக்கொண்டார்
எப்படி மாமா என் நடிப்பு
நடிப்பா!...
உயிரே போய்டுச்சி
தெரியுமா.....
போடி
உடல் தூக்கி வாரி போடுகிறது சத்தமில்லாமல்
என்னடி இதுவும் நடிப்பு தான...
இல்ல மாமா
என்ன விட்டு எங்கேயும் போய்டாதீங்க மாமா
உங்கள விட்டு நிஜமாவே போகபோறன் மாமா
வாயமூடு
என்ன
உளற்றடி
மாமா என் சேலைய
விலக்கிட்டு கழுத்தபாருங்க
என்னடி
முட்டாளாட்டும்
எதோ பண்ணிவச்சிருக்க
மாமா
கழட்டாதீங்க
மாமா
மாமா
கழட்டாதீங்க
மாமா
என் கடைசி ஆசைய
நிறைவேற்றி வைங்க
மாமா
இப்ப
உனக்கு
அடி விழ
போக போது
பாரு
கடைசி ஆசை
இறுதி ஆசைனு
சொல்றதுக்கு
இப்பயே
டாக்டர்கிட்ட போனா
சரியாகிட போது
இல்ல மாமா
இவ்ளோ நேரம்
உயிர கைல
பிடிச்சி வச்சிருக்கறதே
உங்கள பாக்கணும்
என் கடைசி ஆசையலாம்
உங்ககிட்ட சொல்லி நிறைவேத்திகிட்டி
உங்க மடியிலையே
உயிர விட்டுடணும்னு தான் போற உயிர
பிடிச்சி வச்சிருக்கன்.
என் கடைசி ஆசையலாம்
சொல்லட்டுமா
மாமா
என் மாமா
மெளனமா இருக்கிங்க...
மெளனம் சம்மதம்
நான் அப்படியே
எடுத்துக்கறன்
மாமா
நான் உயிரோடு
இருக்கும் போதே
நான் சொல்ற
எல்லாத்தையும்
செஞ்சிடுங்க
மாமா
நான் கண் குளிர
பாக்கணும்
என்ன விடமா
கட்டிபிடிச்சிட்டே
எல்லாத்தையும்
செய்ங்க மாமா
என்ன குளிப்பாட்டி
நீங்க வாங்கி குடுத்த
புடவைல ஒன்ன எடுத்துட்டு வந்து
எனக்கு கட்டி விடுங்க மாமா
மஞ்சள குழச்சி
என் தாலிய
மெதுவா சிக்க எல்லாம் எடுத்து
என் மாரோடு உரசிட்ருக்க மாதிரி வச்சிட்டு
தாலில மஞ்சள
பூசி
குங்குமம் வச்சிட்டு
என் கண்ல ஒத்திகிட்டே
முகத்ல மஞ்சள் தடவி
குங்குமம் வச்சி
உச்சியிலயும் குங்குமம் வச்சிவிடுங்க மாமா...
மாமா மாமா
என் கைலயும் கால்லயும்
மஞ்சள் குங்குமம்
வைங்க
என் சோகமா இருக்கீங்க
கிட்ட வாங்க
என்ன பிடிச்சிகோங்க
உம்மா ...
மாமா இப்ப பரவாயில்லயா
வேலைய தொடருங்க மாமா...
மாமா
இப்ப தான்
நான் சொன்ன வேலைய
சரியா செஞ்சிருக்கீங்க.
மாமா
நம்ம அறையில
உங்க வேட்டில இருந்து
கொஞ்சம் துணிய கிழிங்க...
அப்றம் நான் பேசும்
போது வேணும்னே
உங்க காத அடச்சிபிங்கள்ள
அந்த பஞ்சு
என் தோழி ஜாஸ்
குடுத்த 5 ரூபாய்
என் உயிர் நாணயம்
இத எல்லாத்தையும்
எடுக்கணும்
எங்க ஓடுறிங்க
மாமா
என்ன விட்டுட்டு
நானும் வர்ரன்
என்ன தூக்கிட்டு போங்க மாமா...
எல்லாத்தையும் எடுத்தாச்சு
ஒரு பேப்பரும்
பென்னும்
எடுங்க
என்னோட
உடல் உருப்புகள தானம்
பண்றனு எழுதுங்க
எழுதிட்டிங்களா
என் கைய பிடிச்சி
கையெழுத்து போட்ருங்க மாமா
மாமா எடுத்த பொருள எல்லாம்
சொல்ற மாதிரி செய்ங்க
கால்ல
உங்களோட
வேட்டி துணிய
இருக்க
ரெண்டு காலயும்
சேத்து கட்டுங்க
நாணயத்த எடுத்து நெத்தி காசா ஒட்டிடூங்க..
உங்க காச தாங்க மாமா
நான் முழுங்க போறன்
தாங்க மாமா
மாமா மாமா
தாங்க
நெஞ்சு வலிக்குது சீக்கரம் தாங்க...
மாமா கை வலிக்கும்
நம்ம படுக்கைல கடத்துங்க
என் பக்கத்லயே படுத்துகோங்க மாமா
மாமா இன்னும்
மூக்ல பஞ்சு வைக்கல...
எனக்கு முத்தம் தரல
கட்டி பிடிக்கல
என் கைய கெட்டிமா பிடிக்கல
என்ன நகத்தி
உங்க மடியில
போட்டுக்கல...
என்ன மாமா
சீக்கிரமா...
உயிர் போயிட்ருக்கு மாமா...
மாமா வாங்கிட்டு வந்த பூ!
அத எடுத்து தலைல
வச்சிவிடுங்க
மீதிய
மாலையாக்கி
கழுத்துல போடுங்க...
மாமா
டேபிள்ள
நம்ம
ரெண்டு பேருக்கும்
மோதிரம்
வாங்கிவச்சிருக்கன்
எடுங்கலான்
எடுத்துட்டீங்களா
என் கைல போட்டு விடுங்க
இன்னொன்ன என் கைல
குடுங்க
நான் உங்களுக்கு
போட்டு விடறன் மாமா.....
மாமா
என்ன பத்தி
எதாவது சொல்லுங்களா
மாமா
நீ என்னோட
உயிர் டி
என்ன விட்டு நீ போய்டா
நானும்
உன் கூடவே வந்துடுவன்டி
என்ன விட்டு
ஏன்டி
போகணும்னு
முடிவு எடுத்த...
மாமா
உங்கள விட்டு
போகணும்னு
நான்
முடிவு எடுப்பனா?
அத்தை
இன்னைக்கு
காலைல
ஒரு சோதிடன்கிட்ட
என்ன
கூட்டிட்டு போனாங்க
வீட்ல எல்லாருக்கும்
நேரம் எப்டிருக்குனு
பாக்க சொன்னாங்க.
அப்ப
உங்க ஜாதகத்த பாத்துட்டு
நீங்க எனக்கு முன்னாடியே
சொல்ல முடியல மாமா
நெஞ்சு அடைக்குது மாமா...
அதான்
அந்த சோதிடனோட
வார்த்தைய
பொய்யாக்கணும்னு
உங்களுக்கு முன்னாடியே
உங்க மடியிலயே
மஞ்சளும் குங்குமமா
போறன்
நம்ம
பசங்கள ரெண்டு
பேரயும்
வர வைங்க
என்ன வந்து பாத்துட்டு
எனக்கு கொள்ளி போடட்டும்
என் பட்டுகுட்டிய
ரெண்டயும் அதிகமா
அழவிடாதீங்க...
நீங்களும்
அதிகமா அழாதீங்க...
ஏங்க எனக்கு
பால் ஊத்துங்க...
என் மாமான்ன
மாமா தான்
உம்மா
மாமா
சாமி
கும்பிடணும்
மாமா
படுக்கையில இருந்து
சாமி ரூம்கு
தூக்கிட்டு போங்க மாமா.....
மாமா
நீங்க தான்
என் சாமி
என்ன
இறக்கி
கீழ தரையில கடத்திட்டு நில்லுங்க
நான் முதல்ல
உங்கள கும்பிட்டிட்டு
அப்றம்
சாமி கும்பிடறன்
மாமா
உங்க கால
தொட்டு கும்பிடறதே
ஒரு சுகம் தான்
சந்தோஷத்துலயே
செத்திடுவன் போலருக்கு மாமா
உங்க கால தண்ணீ
ஆக்கபோறன்
அது கண்ணீர் இல்ல மாமா
என் எச்சில்
உம்மா மாமா.......
மாமா சாமிகிட்ட
நான் வேண்டிகிட்டன்
நீங்களும்
வேண்டிக்கோங்க...
என்னனு தெரியுமில்ல
தெரியும்டி
எத்தன ஜென்மம்
எடுத்தாலும்
நாம தான் புருஷன்
பொண்டாட்டி
இத யாராலயும்
மாத்த முடியாது
ம்ம்ம்
ரொம்ப சரியா சொல்லிட்டீங்க அன்பே....
நாதா...
கணவா...
காதலா...
நண்பா...
கள்வா...
உயிரே....
உடலே...
இதயமே...
துடிப்பே...
என் மாமா............................
மாமா
தோட்டத்துக்கு
போலாமா
இயற்கையோடு
ஒன்றும் போது
என்னவர் கூட
இயற்கைய
ரசிச்சிகிட்ருக்கணும்னு நெனைக்கறன்
போலாம்டி
சரி நடக்க முயற்சி பண்ணட்டுமா
மாமா
வேணாம்டி
எங்கன இடிச்சிப்ப
அதான் நீங்க
பக்கத்துல
இருக்கீங்களே
மாமா...
அப்புறம்
எனக்கு என்ன பயம்.
மாமா
மாமா
மாமா
கைய விட்ராதீங்க மாமா
மயக்கம் வர மாதிரி இருக்கு
நான் கூடவே தான்டி இருக்கன்.
மாமா
தோட்டம் வந்துடுத்தா
ம்ம்ம்
வந்துட்டோம்
என்ன கடைசியா
ஒரு தடவ
கட்டி பிடிச்சிக்கோங்க மாமா
உங்களுக்கும்
எனக்கும்
நடுவுல
இடைவெளியே
இருக்கக்கூடாது
மாமா
ஆமாம்
தங்கம்
உனக்கும்
எனக்கும்
நடுவுல
எதும்
குறுக்குல வர்ற
கூடாது
மாமா ஊஞ்சல் ஆடலாமா
செல்லம்
ஊஞ்சல்
ஆடலாமா
எப்படி மாமா
ரெண்டு பேரும்
ஒன்னாவே
யோசிக்கறோம்
ரெண்டு பேருமே
ஒன்னுதான பட்டு....
சரிதான் மாமா
உடம்ப தான்
கடவுள்
தனிதனியா
படச்சிட்டான்...
அதுக்காக தான்
அரவணைப்பையே
கடவுள்
கண்டுபிடிச்சாரு
நமக்காக...
மாமா
தூங்கட்டுமா
மாமா
தூங்குடி
அவள் தூங்கிய
பின்
நானும்
தூங்கி விட்டேன்
அவள் மேலே
இருவரின் உயிரும்
உடலும் பிரியாது
ஒருபோதும்
~என் மாமாவுக்காக
எப்படி இருக்கு மாமா
உங்க மனைவி
பிரபாவதி வீரமுத்து