=======பருவ மாறல்=====

புதிதாய் சில நத்தை மேயல்கள்
நரம்பு வழி ஊரிடத் தவிப்புகள்...
கக்கங்களில் அரும்புது துளிர்த்த கரும்புற்கள்..... மொட்டுக்கள்
அவிழத் தயார்னிலையில்

ஊசி இலைக்காடுகளில்
உரசப் பற்றிக் கொண்ட
தீப்பிளம்பு...
மாயப் பறவைகளில்
மயங்கவைக்கும் மந்திரப் பொடி

தாழ்ந்ததாய் வான வண்டல்கள்
மேலே உயர்ந்தபடி
மிடுக்கானதந்த பூமி
பூதப் படுக்கைகளில்
புளுங்கி வேர்க்கிறது தென்றல்
காய்ந்து போனவன் வயிறு போல
எழிலிடைகள்

ஒரு கணத்தின் இறுதித் தறுவாயில்
யெளவன முகட்டுக்குள்
முகம் புதைக்க தயாராகிறது
பரந்தவெளியில் நிறைந்து
பறந்த பட்டாம்பூச்சி..

ஏற்ற இறக்கங்கள் பள்ளம் மேடாய்
பதம் பார்க்குது உடலை
ஈரேழில் உயிர் ஈரம்காணவே
ஆடைகள் மாற- சில அலங்காரம் தேற
நாணங்கள் சேர புது வெட்க்கமாய் ஊற

அடியடியாய் நடை பழக கட்டளைகள்..
வெளிக்கிறங்க என்றால்
வேத வார்த்தைகள்
ஆழுகிற அச்சங்கள் ஆயிரம் கழுகுப் பார்வைகள் புடை சூழுவே
பவணி போகப் போகிறது ஒரு பருவமாறல்

எழுதியவர் : -முன் பனி- (12-May-16, 12:41 pm)
பார்வை : 272

மேலே