♥♥ சற்றே வித்தியாசமாய் ♥♥

நேற்றைய கனவு
சற்றே வித்தியாசமாய்...
நான் பெண்ணாகவும்
நீ ஆணாகவும்...

வழக்கம் மாறாமல்
அதிலும் நாம்
காதலர்களே....

ஒரே பாடலில்
வாழ்வியலை
கடத்திச்செல்லும்
யுக்தி என் கனவையும்
களவாடியது...

பிரசவ வலியில்
பரிதவிக்கும் நான்
காதலியான உன்னை
என் கணவனாக
தேடினேன்...

பிரசவித்த அத்தருனம்...

தடாலென்று
விழித்தெழுந்தகனம்
பெரும்வலியை
என் வயிற்றில்
உணர்ந்தேன்...
நேற்றிரவு
எண்ணெய் பலகாரம்
அதன் பரவச நிலையை
அடைந்துவிட்டது போலும்...

தண்ணீரும் வெந்தையமும்
சேர்த்து வயிற்றுக்குள்
இறக்கினேன்...
சற்றே அடங்கியது..

மீண்டும் பெரும்
ஆவலோடு தலையனைக்குள்
தஞ்சமடைந்தேன்...
பிறந்தது ஆணா?? பெண்ணா???
என்பதை அறிந்துகொள்ள..

மயக்கநிலை தெளியும்
தருணத்தில்
விடிந்தேவிட்டது...
அம்மாவும் என்னை
எழுப்பிவிட்டார்கள்....
மெல்லிய புன்னகையோடு
என் நாளை தொடர்ந்தேன்...

இக்கனவை இன்று
உன்னிடம் பகிர்ந்துகொள்ள
மிகுந்த ஆவல்...
இருந்தும்....
கொஞ்சம் இவ்விரவு
பொருத்துகொள்...
நாளை சொல்கிறேன்...

எழுதியவர் : ஜெய கீர்த்தி (12-May-16, 4:25 pm)
பார்வை : 85

மேலே