Jeya Keerthi - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : Jeya Keerthi |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 10-May-2016 |
பார்த்தவர்கள் | : 38 |
புள்ளி | : 12 |
உன் விரல்பிடித்து
விளையாடினேன்..
இன்று விதி
விளையாடுகிறது
என் விழியின்
கண்ணீர் துளிகளாய்...
உனதான அலைக்கற்றை
தீண்டியதில் சற்று
அதிர்ந்துதான் போகிறது
என் அலைபேசி...
சட்டைப்பையில்
வைத்திருந்த
காரணத்தால் தானோ
என் இதயமும் சற்று
அதிர்ந்துகொள்கிறது...
அன்பானவளே...
அதிர்வளிக்கா
அலைகற்றைகளை
அன்பளிப்பாக
வேண்டுகிறேன்...
அனுப்புவாயோ....
ஒற்றை கயிற்றில்
ஓராயிரம் கனவுகள்...
கூடிய கூட்டமெல்லாம்
கொட்டும் மேளமாய்
கைக்கொட்டி ஆர்ப்பரிக்க
கவனம் சிதறினும்
உன் கனவுகள்
சிதறுவதில்லை....
ஏந்திய கரங்கள் கண்ட
ஒரு சில சில்லரைகள்
உன் கனவுகளின்
மொத்தங்களில் சரிபாதியே...
கண்கண்ட கனவுகளை
மனதோரம் புதைத்துக்கொண்டு
நீ கயிற்றில் நடக்கிறாய்...
நான் தரையில் நடக்கிறேன்...
தம்பி...
கடன் வாங்கி குடுத்திருக்குப்பா
மறக்காம போன உடனே எடுத்து
பீஸ் கட்டிரு...
--- இது அப்பா.
கண்ணு...
மறக்காம போய் சேர்ந்ததும்
ஒரு போன் போட்ரு
எகுத்த வீட்டு வாத்தியார் வீட்டுக்கு...
--- இது அம்மா.
ஏ ராசா..
வேளா வேளைக்கு வயிறார சாப்டுப்பா
வாரா வாரம் எண்ண தேச்சி குளிப்பா ..
--- இது பாட்டி.
எப்படியாவது இங்லீசு பேச கத்துக்குப்பா
நம்ம ஜில்லாவுலேயே நீதான் ஒசத்தியா வரணும்
--- இது தாத்தா.
என்ன மாதிரி நீயும் ஏர் ஒட்டி கஷ்டப் படாதடா
எப்படியாவது படிச்சி உத்தியோகத்துக்கு வந்துட்றா
--- இது அண்ணன்.
மறக்காம புது பேனா வாங்கிக்க
என் உண்டியல உனக்காக ஓடச்சிருக்கேன்..
--- இது
எவ்விதம் துவங்கட்டும்
நான் இக்கவிதையை???
எங்களின் துவக்கமே
இன்று கடைசியாகி
கொண்டிருக்கிறது...
பசி தீர்க்கும்
பண்டையத்தோர்க்கு
பஞ்சம் தீர்க்க
இன்று நாதியில்லை...
வாடிய பயிர்களை
காணவே அவர்களின்
இதயங்களில் வலுவில்லை...
மழைக்கு இதயமே இல்லை...
உண்மைதான்...
இருந்திருந்தால் கொஞ்சம்
ஈரம் சொட்டியிருக்கும்...
அண்டையினத்தவனே
அலட்சியப்படுத்துகிறான்...
ஆண்டவனோ வேடிக்கை
பார்க்கிறான்...
அவர்களை படைத்தவனும்
அவன்தானே...
உற்பத்தி செய்பவனே
விலை நிர்ணயிக்கும்
இவ்வுலகில்...
அறுப்பவனுக்கு மட்டும்
சாபக்கேடோ...
நாளை நாங்கள்
சோறுண்ண இன்று
பலர் மண் உண்டார்கள்...
இதுவே எங்களுக்கா
பண்டை தமிழரின்
வாரிசுகள் நாங்கள்...
எங்கள் பண்பாட்டை
பரிகாசம் செய்பவர்கள்
நீங்கள்...
எங்கள் வீரமதை
தஞ்சை கல்வெட்டுகள்
பஞ்சமில்லாமல் பாடுவதை
கணினியின் கண்ணாளர்களே
தாங்கள் கேட்டிருக்க
வாய்ப்பில்லை...
விரல் நுனியில்
உலகம் காணும்
வித்தை அறிந்தவர்களே...
கொம்பின் நுனியில்
வீரம் காணும்
தமிழனின் வித்தையை
புரிந்தவர்கள் உங்களில்
ஒருவனும் இல்லை....
புரிந்தவனாய் இருந்திருந்தால்
புல்லரித்துப்போயிருப்பாய்..
எங்களை அறிந்தவனாய்
இருந்திருந்தால்
அலறிபோயிருப்பாய்...
புரிந்துகொள்...
எங்கள் பண்பாட்டை
அறிந்துகொள்...
ஒவ்வொரு தமிழனுக்கும்
வேண்டும் எங்கள்
வீரவிளையாட்டு
அதுதான்
என் கவிதை நீயென
நான் எழுத
முற்றுப்புள்ளியுடன்
முடிக்க மனமில்லை
என் தமிழே நீயென
நான் எழுத
அன்னியமொழிக்கு அங்கு
அனுமதியில்லை
என் உலகமே நீயென
நான் எழுத
வேறொன்றும் எனக்கு
அவசியமில்லை...
ஆக...
உண்மைக்கு என்றும்
என் கவிதையில்
இடமில்லை...
😉😉😉😉😉
நேற்றைய கனவு
சற்றே வித்தியாசமாய்...
நான் பெண்ணாகவும்
நீ ஆணாகவும்...
வழக்கம் மாறாமல்
அதிலும் நாம்
காதலர்களே....
ஒரே பாடலில்
வாழ்வியலை
கடத்திச்செல்லும்
யுக்தி என் கனவையும்
களவாடியது...
பிரசவ வலியில்
பரிதவிக்கும் நான்
காதலியான உன்னை
என் கணவனாக
தேடினேன்...
பிரசவித்த அத்தருனம்...
தடாலென்று
விழித்தெழுந்தகனம்
பெரும்வலியை
என் வயிற்றில்
உணர்ந்தேன்...
நேற்றிரவு
எண்ணெய் பலகாரம்
அதன் பரவச நிலையை
அடைந்துவிட்டது போலும்...
தண்ணீரும் வெந்தையமும்
சேர்த்து வயிற்றுக்குள்
இறக்கினேன்...
சற்றே அடங்கியது..
மீண்டும் பெரும்
ஆவலோடு தலையனைக்குள்
தஞ்சமடைந்தேன்...
பிறந்தது ஆணா?? பெண்ணா???
என்பதை அறிந்துகொள்ள..
மய
உறங்கவேண்டிய
நேரமதில்
உன் நினைவுகளை
கட்டிக்கொண்டு
களமிறங்கினேன்
இக்கவிதையில்...
கவிதைகளுக்கான
வார்த்தைகளை
புத்தியறிந்து பின்
விரல் அறியும்
வேளையில்
இடரிப்போகிறது...
நான் விடுவதாய் இல்லை...
இறங்கியது
காதல் களம் அல்லவோ....
எழுதிமுடித்து
பிழை திருத்தும்
வேளையில்...
உண்மையறிந்து
உருகினேன்....
நம்மை மிஞ்சும்
அன்பு கொண்டது
அக்காதலும்
அதற்கான கவிதையும்
மட்டுமே...
இவர் பின்தொடர்பவர்கள் (2)
![சேகர்](https://eluthu.com/images/userthumbs/f0/zrvqf_5009.jpg)
சேகர்
Pollachi / Denmark
![முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்](https://eluthu.com/images/userthumbs/f3/qliou_30127.jpg)
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
இவரை பின்தொடர்பவர்கள் (2)
![சேகர்](https://eluthu.com/images/userthumbs/f0/zrvqf_5009.jpg)
சேகர்
Pollachi / Denmark
![முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்](https://eluthu.com/images/userthumbs/f3/qliou_30127.jpg)