கயிற்றில் சில கனவுகள்

ஒற்றை கயிற்றில்
ஓராயிரம் கனவுகள்...

கூடிய கூட்டமெல்லாம்
கொட்டும் மேளமாய்
கைக்கொட்டி ஆர்ப்பரிக்க
கவனம் சிதறினும்
உன் கனவுகள்
சிதறுவதில்லை....

ஏந்திய கரங்கள் கண்ட
ஒரு சில சில்லரைகள்
உன் கனவுகளின்
மொத்தங்களில் சரிபாதியே...

கண்கண்ட கனவுகளை
மனதோரம் புதைத்துக்கொண்டு
நீ கயிற்றில் நடக்கிறாய்...
நான் தரையில் நடக்கிறேன்...

எழுதியவர் : ஜெய கீர்த்தி (21-Dec-16, 12:22 pm)
பார்வை : 115

மேலே