நானொரு பித்தன்
நற்சிந்தை என்னும் நறுமணம் வீசும் பூக்களையெல்லாம் சேகரித்து, அவற்றை மாலையாக்கி,
அணிந்து கொள்ளுங்களென்று கண்ணில் கண்போருக்கெல்லாம் அளித்தேன்...
அதை வாங்கியவர்களில் சிலர்
நான் நகரும் வரை அணிந்துவிட்டு, நகர்ந்தப் பிறகு குப்பையென தூக்கியெறிந்தார்கள்...
இன்னும் சிலரோ மாலையை வாங்கி என் கண்முன்னே தூக்கி எறிந்தார்கள்..
இன்னும் சிலரோ மாலையை வாங்கவே மறுத்தார்கள்...
இன்னும் சிலரோ நானொரு பைத்தியமென்றே விலகிச் சென்றார்கள்...
நான் பொக்கிஷமென்றே போற்றியவற்றை எல்லாம் என் கண்முன்னே குப்பைகளென்று பறைசாற்றினார்களென்ற போதிலும் அவர்களின் மீது வெறுப்பு கொள்ளாமலும்
மீண்டும் நற்சிந்தை எனும் மணம் கமிழும் மலர்களைச் சேகரித்தே,
மாலை தொடுக்கிறேன்,
நானுமொரு பித்தனாய்....