தக்கனபிழைத்தல் - Survival of the fittest
காசுக்காக டியூசன் எடுக்கும்
எங்க ஊரு டீச்சர்.
ஊருக்காரவங்க ஏதோ செல்றாங்கனு
சாதி வாரியா பிரிச்சி
தனித்தனியா உட்கார வச்சி.
தீண்டாமை ஒரு
பாவச்செயல்.
பெருங்குற்றம்.
மனித நேயமற்ற செயல்'னு
முதல் பக்கத்துல அச்சடிச்ச புத்தகத்தலிருந்து
தினமும் பாடம் சொல்லித்தராங்க.
ரொம்ப நாளா புரியாம இருந்த
டார்வின் தத்துவம்.
இன்னைக்கு புரிஞ்சுது எனக்கு.
தக்கனபிழைத்தல்.
- கோபி சேகுவேரா