எரிதழல் கொண்டு வா
வீரப்பெண்கள் வாழ்ந்த தூயமண்ணில் பெண்ணவளோ பெருஞ்சக்தி
ஆனால் இங்கோ மாறிய நிலை
சம உரிமை கேட்கும்
பெண்ணவள் வெளி உலகத்தின் பார்வைக்கு கேலி பொருளாய்...!
பெண்ணே...!
சமைப்பதும் துவைப்பதும்
மட்டுமல்ல உன் பணிகள்...
உண்மைகளை உரைப்பதும்
தீமைகளை உதைப்பதும் உன் பணிகளே...!
வீச வரும் காற்றுக்கோர்
வலிமை உண்டு...
வெகுண்டெழும் புயலுக்கும்
வீரம் உண்டு...!
அமைதி கொள்வதால்
தீர்ந்து போகுமா பெண்ணவள் பிரச்சனைகள்...!
பெண்களின் உரிமைகளோ
கொடிய ஆண் கயவர்களால் பறிக்கப்பட்டு தன் மண்ணிலே சுதந்திரற்றவளாய் வாழும் நிலை..!
வீர வேங்கையே விரைந்தெழுந்து எரிதழல் கொண்டு வா...
செந்நிற விழிகள் கொண்டு
பறந்து சென்றே அழித்து விடுவோம்
இவ் உலகின் பெண் அடிமைத்தனத்தை....!
சி.பிருந்தா
மட்டக்களப்பு.