♥♥ மெய்க்காதல் ♥♥
![](https://eluthu.com/images/loading.gif)
உறங்கவேண்டிய
நேரமதில்
உன் நினைவுகளை
கட்டிக்கொண்டு
களமிறங்கினேன்
இக்கவிதையில்...
கவிதைகளுக்கான
வார்த்தைகளை
புத்தியறிந்து பின்
விரல் அறியும்
வேளையில்
இடரிப்போகிறது...
நான் விடுவதாய் இல்லை...
இறங்கியது
காதல் களம் அல்லவோ....
எழுதிமுடித்து
பிழை திருத்தும்
வேளையில்...
உண்மையறிந்து
உருகினேன்....
நம்மை மிஞ்சும்
அன்பு கொண்டது
அக்காதலும்
அதற்கான கவிதையும்
மட்டுமே...