பொய்
என் கவிதை நீயென
நான் எழுத
முற்றுப்புள்ளியுடன்
முடிக்க மனமில்லை
என் தமிழே நீயென
நான் எழுத
அன்னியமொழிக்கு அங்கு
அனுமதியில்லை
என் உலகமே நீயென
நான் எழுத
வேறொன்றும் எனக்கு
அவசியமில்லை...
ஆக...
உண்மைக்கு என்றும்
என் கவிதையில்
இடமில்லை...
😉😉😉😉😉