வாக்கும் மூக்கும்

வாக்குக்கும் மூக்குக்கும்
வலிமை அதிகம்தான்..

வீட்டிலிருந்த ஜானகி
காட்டுக்குப் போகக்
காரணமானது,
கைகேயியின் வாக்கு..

காட்டிலிருந்த சீதை
இராவணன்
கூட்டுக்குச் செல்லக்
காரணமானது,
சூர்ப்பனகையின் மூக்கு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (28-Dec-16, 6:57 pm)
பார்வை : 63

மேலே